MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!

AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!

AC Hack: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து ஏற்படும் பிசுபிசுப்பை போக்க ஏசியின் 'டிரை மோடு' (Dry Mode) சிறந்தது. இதனால் கரண்ட் பில் எப்படி குறையும்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 26 2026, 09:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்க டிப்ஸ்
Image Credit : AI

ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்க டிப்ஸ்

மழைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து ஒருவித பிசுபிசுப்பு உணர்வைத் தரும். இதனால் பலரும் ஏசியைப் பயன்படுத்துவார்கள். ஆனால், கரண்ட் பில் அதிகமாகிவிடுமோ என்ற பயம் இருக்கும். உங்கள் ஏசி ரிமோட்டில் உள்ள ஒரு பட்டன் இந்த சிக்கலைத் தீர்க்கும். அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.

டிரை மோடு என்றால் என்ன?

இப்போதெல்லாம் வரும் பெரும்பாலான ஏசிகளில் 'டிரை மோடு' அல்லது 'மான்சூன் மோடு' என்ற வசதி உள்ளது. இது குறிப்பாக மழைக்காலத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இதை ஆன் செய்தால், ஏசி காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும். இதனால், அறை அதிகமாகக் குளிராகாமலேயே, பிசுபிசுப்பு நீங்கி இதமாக இருக்கும்.

இதையும் படிங்க: Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிரை மோடை ஆன் செய்வது எப்படி?
Image Credit : Gemini AI

டிரை மோடை ஆன் செய்வது எப்படி?

உங்கள் ஏசி ரிமோட்டில் 'Dry' அல்லது 'Monsoon' என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் போதும். சில ஏசிகளில் 'Mode' என்ற பட்டனுக்குள் இந்த ஆப்ஷன் இருக்கும். அந்த பட்டனை அழுத்தி 'டிரை மோடு'க்கு மாற்றிக்கொள்ளலாம்.

'டிரை மோடு' இயங்கும்போது, ஏசி கம்ப்ரசர் தொடர்ந்து முழுத் திறனில் இயங்காது. அது விட்டு விட்டு இயங்கும். இதனால் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறையும். மேலும், இது ஈரப்பதத்தைக் குறைப்பதால், அறை விரைவாகவே ஃபிரெஷ்ஷாகிவிடும். நீண்ட நேரம் ஏசியை ஓட வேண்டிய அவசியம் இருக்காது.

இதையும் படிங்க: Hotel Bathrooms: ஹோட்டல் பாத்ரூம்ல எதுக்கு 2 வாஷ்பேசின்? இதுக்கு பின்னாடி இருக்கும் மாஸ்டர் பிளான்!

34
ஏசி ஃபில்டரில் சீக்கிரமாக அழுக்கு சேரும்
Image Credit : Getty

ஏசி ஃபில்டரில் சீக்கிரமாக அழுக்கு சேரும்

மழைக்காலத்தில் ஏசி ஃபில்டரில் சீக்கிரமாக அழுக்கு சேரும். அழுக்கான ஃபில்டர், காற்றோட்டத்தைத் தடுத்து, ஏசிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். எனவே, சில நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது நல்ல காற்றோட்டத்தையும், சிறந்த குளிரூட்டலையும் உறுதி செய்யும்.

மழைக்காலத்தில் பெரிய பிரச்சினை வெப்பம் அல்ல, காற்றில் உள்ள அதிக ஈரப்பதம்தான். 'டிரை மோடு' இந்த ஈரப்பதத்தைக் குறைக்க உதவுகிறது. இது அறையை மிகவும் இதமானதாக மாற்றுவதோடு, உங்கள் கரண்ட் பில்லையும் குறைக்க உதவும்.

44
வெப்பநிலையை மாற்ற வேண்டியதில்லை
Image Credit : Asianet News

வெப்பநிலையை மாற்ற வேண்டியதில்லை

டிரை மோடை ஆன் செய்தவுடன் ஏசியின் ஃபேன் வேகம் தானாகவே குறைந்த அளவுக்கு மாறிவிடும். இதில் நீங்கள் வெப்பநிலையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது; ஏசியே காற்றில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்ப இயங்கும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும்

மழைக்காலத்தில் அறையில் ஈரப்பதம் அதிகமிருந்தால் சுவர்களிலும், துணிகளிலும் பூஞ்சை காளான்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் வளரும். டிரை மோடு ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதால், அறை துர்நாற்றமின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

வெயில் காலத்தில் டிரை மோடு செட்டாகாது

டிரை மோடு என்பது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் மழைக்காலம் மற்றும் மேகமூட்டமான நாட்களுக்கு மட்டுமே ஏற்றது. கோடைகாலத்தின் அதிக வெப்பத்தை தணிக்க வழக்கமான 'Cool Mode' மட்டுமே சரியான தேர்வாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்தல்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Potato Storage Tips: உருளைக்கிழங்கு சீக்கிரம் கருத்துப் போகுதா? பிரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Salary : ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம்! இந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு இவ்வளவு ஊதியமா?
Recommended image3
வீடு மொத்தமும் கமகமக்கும்..! இட்லி, தோசைக்கு டேஸ்டியான கத்தரிக்காய் கொஸ்து.. இப்படி டிரை பண்ணுங்க..
Related Stories
Recommended image1
Home Cool: ஏசி தேவையில்லை! கோடை வெயிலில் வீட்டை ஜில்லென்று வைத்திருக்க 5 எளிய வழிகள்
Recommended image2
AC Maintenance Tips: ஏசி கரண்ட் பில் எகிறுகிறதா? நீங்க செய்யும் 'இந்த' 1 தவறை உடனே நிறுத்துங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved