Vastu Tips: வீட்டில் பணக்கஷ்டமா? பாத்ரூமில் இந்த 'ஒரு' பொருளை வைங்க பணம் கொட்டும்!
Vastu Tips: எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவில்லையா? வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்க வீட்டு பாத்ரூமில் உப்பை வைத்தால் கஷ்டங்கள் தீர்ந்து பணம் கொட்டும் என வாஸ்து சாந்திரம் சொல்கிறது.
வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்ன?
கண்ணாடி கிண்ணத்தில் உப்பு போட்டு வையுங்கள்
பலர் தங்கள் வீட்டின் மற்ற அறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாத்ரூம் வாஸ்துவுக்குக் கொடுப்பதில்லை. இதன் விளைவாக, நிதி மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்குத் தீர்வாக, வாஸ்து சாஸ்திரம் அதிக செலவில்லாத ஒரு சிறந்த வழியைச் சொல்கிறது. பாத்ரூமில் 'உப்பு' வைப்பதன் மூலம், எதிர்மறை ஆற்றல் விலகி, வீட்டில் நேர்மறை சூழல் உருவாகும். இதனால், பணக் கஷ்டங்கள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பு போட்டு பாத்ரூமில் வைக்க வேண்டும்.
வடகிழக்கு மூலையில் உப்பு வைக்கவும்
பொதுவாக நாம் படுக்கையறை, சமையலறை வாஸ்துவில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் பாத்ரூம் விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறோம். குளியலறையையும் புனிதமாகப் பார்க்க வேண்டும், இல்லையெனில் அது பல வாஸ்து தோஷங்களுக்குக் காரணமாகிவிடும். இதற்குத் தீர்வாக, பாத்ரூமின் ஒரு மூலையில் கண்ணாடி கிண்ணத்தில் சிறிது உப்பு வைத்தால், எதிர்மறை ஆற்றல் மற்றும் திருஷ்டி தோஷம் நீங்கும்.
இது ராகு மற்றும் கேதுவின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும். காற்றில் உள்ள கெட்ட சக்தியை ஈர்த்து, நேர்மறை அதிர்வுகளை (Positive Vibrations) இது உருவாக்கும். வடகிழக்கு மூலையிலோ அல்லது பிரதான வாசலுக்கு எதிராகவோ உப்பை வைத்தால், தோஷங்கள் கணிசமாகக் குறையும் எனப் பண்டிதர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இப்படி செய்யுங்கள்
கல் உப்பு அல்லது வீட்டில் பயன்படுத்தும் சாதாரண உப்பை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு, பாத்ரூமின் ஒரு மூலையில் வையுங்கள். வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பழைய உப்பை மாற்றி, புதிய உப்பை நிரப்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம், விரைவில் நல்ல பலன்களை நீங்கள் காணலாம்.
பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மத நம்பிக்கைகள், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. இதைப் பின்பற்றுவதால் கிடைக்கும் பலன்கள் நபருக்கு நபர், அவர்களின் ஜாதகம் மற்றும் நம்பிக்கையைப் பொறுத்து மாறுபடலாம். இது எந்தவொரு நிதி அல்லது மருத்துவப் பிரச்சினைக்கும் நேரடி தீர்வாகாது. எனவே, சந்தேகங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதல்களுக்கு உரிய வாஸ்து அல்லது ஜோதிட நிபுணர்களை அணுகவும்.

