- Home
- Astrology
- Astrology: ஆகஸ்ட் 1 முதல் சுக்கிர யோகம்: தொழில், பணத்தில் ‘ஜாக்பாட்’ அடிக்கப்போகும் 4 ராசிகள்!
Astrology: ஆகஸ்ட் 1 முதல் சுக்கிர யோகம்: தொழில், பணத்தில் ‘ஜாக்பாட்’ அடிக்கப்போகும் 4 ராசிகள்!
Venus Transit August 2026: சுக்கிரன் ஆக்ஸ்ட் 1 ஆம் தேதி முதல் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால் 4 ராசிகளுக்கு பொட்டதெல்லாம் பொன்னாகப் போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.

சுக்கிரன் கன்னி பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் அழகு, சொகுசு, காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாக விளங்குபவர் சுக்கிர பகவான். அசுரர்களின் குருவான இவர், ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியுமாவார். பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர ஒரு மாத காலம் எடுத்துக்கொள்வார்.
தற்போது சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான், ஆகஸ்ட் 1-ஆம் தேதி புதனின் ஆட்சி வீடான கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே எதிரொலிக்கும். இருப்பினும், பின்வரும் 4 ராசியினருக்கு தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் பொற்காலமாக அமையவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து கீழே காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சுக்கிரன் நுழைகிறார். இதனால் உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் அபார வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணி அமையும் வாய்ப்பு உண்டு. பங்குச்சந்தை அல்லது பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு 4-ஆம் வீடான சுக ஸ்தானத்தில் இந்த பெயர்ச்சி நிகழ்கிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் சுபமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விரும்பிய இடமாற்றம் கேட்கும் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் சொந்தமாக புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும். மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு உங்களுக்கு இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 2-ஆம் வீடான தன மற்றும் குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது மிகுந்த நன்மைகளைத் தரும். நீண்ட காலமாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்ததை விட நல்ல ஆதாயம் கிடைக்கும். சமூகத்திலும் பணியிடத்திலும் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் இனிமை கூடும். புதிய வாகனம் அல்லது சொத்து சேர்க்கைக்கான யோகம் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு 9-ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ இதுவே சிறந்த காலம். தொழில் தொடர்பான வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக லாபத்தைத் தரும். படிப்பில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

