MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • vinayagar chaturthi 2022 :இந்த ஆண்டு விநாகயர் சதுர்த்தியோடு.. சுற்றுசூழலையும் பாதுகாப்போம்.. சில டிப்ஸ் இதோ !

vinayagar chaturthi 2022 :இந்த ஆண்டு விநாகயர் சதுர்த்தியோடு.. சுற்றுசூழலையும் பாதுகாப்போம்.. சில டிப்ஸ் இதோ !

நம் சந்ததிக்கு நன்மை பயக்கும் விதத்தில் எப்படி சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியும் என்பதை பார்க்கலாம்.

3 Min read
Kanmani P
Published : Aug 25 2022, 06:48 PM IST| Updated : Aug 25 2022, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
eco friendly vinayagar chaturthi 2022

eco friendly vinayagar chaturthi 2022

புல்லாங் குழல் மன்னன் கிருஷ்ணனின் பிறந்த நாள் முடிந்த கையோடு நம் செல்லப்பிள்ளை விநாயகரின் பிறந்தநாள் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் 31ஆம் தேதி வருகிறது. நாடு முழுவதும் பிள்ளையார் அவதரித்த இந்நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வழிபாட்டிற்கான சிறந்த நேரமாக வரும் 31ஆம் தேதி காலை 11.04 முதல் மதியம் 1:37 வரை நல்ல நேரம் என கூறப்படுகிறது 

இந்நேரத்தில் விநாயகர் பெருமானை பூஜிப்பது மிக சிறப்பாகும். சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால் கேட்டதை கொடுப்பார் விநாயக சிவபெருமான் என்பது நம்பிக்கை. சிவா பெருமான் பார்வதியின் மூத்த மகனான பிள்ளையாரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி அன்று சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்வோம். அதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

25
eco friendly vinayagar chaturthi 2022

eco friendly vinayagar chaturthi 2022

மூன்று முதல் பத்து நாட்கள் வரை வீடுகள் மற்றும் கோவில்களில் கொண்டாடப்படும் இந்நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது ஒரு ஐதீகமாகும். அதாவது மழைக்காலம் துவங்கும் ஆவணி மாதத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை நீர்த்தேக்கங்களில் கரைப்பதன் மூலம் நீர் பிடிப்பு அதிகமாகும் என்பது நம்பிக்கையாக இருந்த வருகிறது. அதன்படி தான் பத்து நாட்கள் வரை வைத்து பூஜிக்கப்படும் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைகிறோம்.  அதே போல வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயக பெருமானை வைத்து வணங்குவதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் களிமண்ணால் உறிஞ்சப்படும் என்பதும் ஒரு கூற்றாகும்.

மேலும் செய்திகளுக்கு...பிள்ளையார் விரும்பும் மனம் இல்லா எருக்கம் பூ மாலை..! அள்ளிக்கொடுக்கும் எண்ணற்ற பலன்கள்..!

ஆனால் தற்போது வசதிகள் கூடியதால் மக்காத பொருட்களை வைத்து பிள்ளையார் செய்யப்படுகிறது. இதனை நீரில் கரைப்பதால் நீர்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.  

35
eco friendly vinayagar chaturthi 2022

eco friendly vinayagar chaturthi 2022

நம் சந்ததிக்கு நன்மை பயக்கும் விதத்தில் எப்படி சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியும் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக சந்தையில் கிடைக்கும் விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் அல்லது வேறு சில மக்காத பொருட்கள் செய்யப்படுகிறது. பாரம்பரிய களிமண்ணால் விநாயகர் சிலைகளை 100%  மக்கும் தன்மை கொண்டவையாக உருவாக்கி நீரில் கரைப்பது சிறந்ததாகும். சிறிய விநாயகர் சிலைகளை வீட்டிலேயே செய்யலாம். முழுவதுமாக களிமண்ணில் சிலைகளை உருவாக்கலாம். அலங்கார பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு புதிய பூக்கள் இலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலையை அலங்கரிக்கலாம். வண்ணங்களுக்கு பதிலாக பச்சரிசி மாவால் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்யலாம் இதில் வண்ணம் சேர்க்க சந்தனம், குங்குமம், மஞ்சள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்: இந்த ஒரு பொருளை வாங்கி தலையில் சுற்றி போட்டால் போதும்..உடம்பில் இருந்து தீய சக்தி, பீடை போன்றவை ஓடியே போகும்..
களிமண்ணில் பிள்ளையார் செய்யும் போது அதில் ஒரு விதையை வைத்து செய்ய வேண்டும். பின்னர் வெளிப்பாடு முடிந்தது செடி வைக்கும் தொட்டிகள் கரைப்பதன் மூலம் வருடத்திற்கு ஒரு செடியை  வளர்க்கும் நடைமுறையும் தற்போது உள்ளது.

45
eco friendly vinayagar chaturthi 2022

eco friendly vinayagar chaturthi 2022

திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் பூக்கள், மாலை போன்றவற்றை குழிகளில் இட்டு உரங்களாகவும் மாற்றலாம். முடிந்தவரை பாலீத்தின் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவையான போது மட்டும் மின் விளக்குகளை ஒளிர  விடுவதால் மின்சாரத்தையும் சேமிக்கலாம். அதேபோல கோவில்களில் சிறிது நேரம் மட்டும் ஒலிபெருக்கியை பாடவிடலாம் இதனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயதானவர், மற்றும் உடல்நிலை குன்றியவர்களுக்கு இடையூறாக இருக்காது.

மேலும் செய்திகள்: Lord Ganesha songs: விநாயகர் சதுர்த்தி நாளில் கேட்க வேண்டிய 6 பத்தி பாடல்கள், உச்சரிக்க வேண்டிய 3 மந்திரங்கள்.

வீட்டில் வைக்கப்பட்ட பிள்ளையர்களை இறுதியாக நீர் நிலைகளில் கரிக்காமல், ஒரு வாளி தண்ணீரில்   மூழ்கடித்து அந்த நீரை செடிகளுக்கு உற்றலாம். களிமண் கலந்த நீர் என்பதால் அது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கும். மற்றோரு வழியில், களிமண்ணுக்கு பதிலாக வெற்றிலையிலும் சிலை செய்து கும்பிடுவது ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் மேலும் நன்மை பயக்கும்.  

இந்த சிறந்த பெருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாத விநாயகரை வழிபடுவதை உறுதி செய்வோம். சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத நம்மால் இயன்ற நற்செயல்களை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்து மகிழலாம். ரசாயனங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வுகளை பரப்புவோம்.

55
eco friendly vinayagar chaturthi 2022

eco friendly vinayagar chaturthi 2022

திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் பூக்கள், மாலை போன்றவற்றை குழிகளில் இட்டு உரங்களாகவும் மாற்றலாம். முடிந்தவரை பாலீத்தின் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவையான போது மட்டும் மின் விளக்குகளை ஒளிர  விடுவதால் மின்சாரத்தையும் சேமிக்கலாம். அதேபோல கோவில்களில் சிறிது நேரம் மட்டும் ஒலிபெருக்கியை பாடவிடலாம் இதனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயதானவர், மற்றும் உடல்நிலை குன்றியவர்களுக்கு இடையூறாக இருக்காது.

வீட்டில் வைக்கப்பட்ட பிள்ளையர்களை இறுதியாக நீர் நிலைகளில் கரிக்காமல், ஒரு வாளி தண்ணீரில்   மூழ்கடித்து அந்த நீரை செடிகளுக்கு உற்றலாம். களிமண் கலந்த நீர் என்பதால் அது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கும். மற்றோரு வழியில், களிமண்ணுக்கு பதிலாக வெற்றிலையிலும் சிலை செய்து கும்பிடுவது ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் மேலும் நன்மை பயக்கும்.  

இந்த சிறந்த பெருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாத விநாயகரை வழிபடுவதை உறுதி செய்வோம். சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத நம்மால் இயன்ற நற்செயல்களை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்து மகிழலாம். ரசாயனங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வுகளை பரப்புவோம்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved