Lord Ganesha songs: விநாயகர் சதுர்த்தி நாளில் கேட்க வேண்டிய 6 பத்தி பாடல்கள், உச்சரிக்க வேண்டிய 3 மந்திரங்கள்.
Lord Ganesha Mantras: விநாயகரை வழிபடும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், கேட்க வேண்டிய பத்தி பாடல்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Lord Ganesha Mantras
விநாயகர் சதுர்த்தி அன்று கணபதிக்கு சிறப்பான பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். எனவே, இந்த நாளில் நீங்கள் வினை தீர்க்கு விநாயகர் பெயரை சொல்லி, இந்த மந்திரங்களை உச்சரித்தால் போதும், வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியும் பிறந்திடும்.
Lord Ganesha Mantras
எனவே, விநாயகரை வழிபடும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், பாடல்கள் பற்றி இந்தப் பதிவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைகள் செய்யும் பொழுது உச்சரித்தால், வாழ்வில் செல்வம் பெருகும், சகல சம்பத்துகளும் கிட்டும் என்பது ஐதீகம்.
Lord Ganesha Mantras
விநாயகர் ஸ்லோகம்1:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
கணபதி ஸ்லோகம் 2:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
Lord Ganesha Mantras
கணபதி ஸ்லோகம் 3:
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.
Lord Ganesha Mantras
விநாயகர் சதுர்த்தி நாளில் கேட்க வேண்டிய பத்தி பாடல்கள்:
பாடல் 1
கருணை பொங்கும் கற்பக நிதியே
காலம் எல்லாம் ஆளும் கதியே
உருவ விந்தையே உலகின் ஆதியே
ஒய்யார வடிவாய் அசையும் அழகே
பாடல் 2:
கற்பக நாத நமோ..நமோ
கணபதி தேவா நமோ..நமோ
கஜமுக நாத நமோ..நமோ
காத்தருள்வாயே நமோ..நமோ
Ganesh Chaturthi
பாடல் 3:
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் பாடல் - TL மகாராஜன் பாடியது.
பாடல் 4:
வெற்றி தரும் விநாயகர் கணநாதா - ஹரினி பாடியது.
பாடல் 5:
மகாநதி சோபனா பாடிய - ஓம் கணபதி நாதனே போற்றி, ஓம் கலியுக முதலே போற்றி (108 போற்றி பாடல்)
பாடல் 6:
தலை எழுத்தை மாற்றி விடும் பிள்ளையார் துணை -TL மகாராஜன் பாடியது.