- Home
- Lifestyle
- பிள்ளையார் சதுர்த்திக்கு கட்டாயம் தரிசிக்க வேண்டிய கணபதி கோவில்கள்..அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
பிள்ளையார் சதுர்த்திக்கு கட்டாயம் தரிசிக்க வேண்டிய கணபதி கோவில்கள்..அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
Manakula Vinayagar and Uchi Pillayar: தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் பக்தர்களால், விநாயர் சதுர்த்தி நாளில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய விசித்திரமான விநாயர் கோவில்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Manakula Vinayagar and Uchi Pillayar
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாளில், பிள்ளையார் சதுர்த்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
வினை தீர்க்கும் விநாயகரை நினைத்து வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும். விநாயகப் பெருமானை, பிள்ளையார் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம் கொழிக்கும். குறிப்பாக, இந்த நாளில் விரதம் இருந்து கணபதியை வழிபாடு செய்வதால், செய்யும் காரியங்களில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் படிக்க ...விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி..? இந்த 1 பொருள் சேர்த்தால் டேஸ்ட் செம்மையா இருக்கும்..
Manakula Vinayagar and Uchi Pillayar
எனவே, நீங்கள் கட்டாயம் இந்த நாளில் தமிழகத்தில் இருக்கும் உலக புகழ் வாய்ந்த, அற்புதம் மற்றும் மகத்துவம் கொண்ட மணக்குள விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. நாம் இந்த பதிவில் இந்த விநாயகர் கோவில்களுக்கு இருக்கும் பல அற்புத வரலாறுகளும், அதிசய சக்திகளும் பற்றி பார்க்கலாம்.
Manakula Vinayagar and Uchi Pillayar
மணக்குள விநாயகர் கோவில்:
பாண்டிச்சேரிக்கு பெருமை சேர்க்கும் ஆன்மீகத் தலங்களில் ஒன்றான, இத்தலம் பல நூற்றாண்டுமிக்க வரலாற்றை தன்னுள் கொண்டுள்ளது.இங்கு மூலவர் கிணற்றின் மீதே அமர்ந்துள்ளார். இது கிணறு அல்லது குளம் என்றே அழைக்கப்படுகிறது. உலகில் ஒரு தெய்வம் அதன் தீர்த்தகுளத்தின் மேலே அமர்ந்திருப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
Manakula Vinayagar and Uchi Pillayar
மணக்கோள விநாயகர் கோவில் வளாக சுற்றுச் சுவர்களில் பலவிதமான விநாயகரின் சுதை ஓவியங்களும், 27 நட்சத்திர அதிபதிகளின் ஓவியங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. மேலும், கோபுரம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது இத்தலத்தின் பள்ளியறையில் அவரது தாயார் சக்தி தேவியாருடன் விநாயகர் வீற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Manakula Vinayagar and Uchi Pillayar
உச்சி பிள்ளையார்:
திருச்சியில் அமைத்துள்ள இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி நாளில் ஆண்டுதோறும், மலைக்கோட்டை, கொழுக்கட்டை நெய்வேத்திய ஆராதனை நடைபெறும்.
உலகில் வேறெந்த பகுதியிலும் மலை உச்சியில் பிள்ளையார் கோவில் அமர்ந்திருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும், இந்த அளவுக்கு பிரபலமான கோவில் வேறெங்கும் இல்லை.இப்புனித தலத்திற்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில் 275 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
Manakula Vinayagar and Uchi Pillayar
மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மேலும், இங்கு ஆயிரம் கால் மண்டபமும் இருக்கிறது. மேலும், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள், அப்பர், ஞானசம்பந்தர், ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது. மேலும், இந்த கோவிலில் வடிவமைக்கப்பட்ட கோவிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது.