- Home
- Lifestyle
- பிள்ளையார் விரும்பும் மனம் இல்லா எருக்கம் பூ மாலை..! அள்ளிக்கொடுக்கும் எண்ணற்ற பலன்கள்..!
பிள்ளையார் விரும்பும் மனம் இல்லா எருக்கம் பூ மாலை..! அள்ளிக்கொடுக்கும் எண்ணற்ற பலன்கள்..!
பிள்ளையாருக்கு பூஜை செய்ய உகந்த மலரான எருக்கம் பூ பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் குறித்த தகவல்கள் இதோ...

கமகமக்கும் வாசனை மிகுந்த எத்தனையோ மலர்கள் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு அணிவிக்கப்படும் எருக்கம் பூவுக்கு எந்த மலரும் ஈடாகாது. எருக்கம் பூவை அன்று ஒரு நாளாவது தேடி பிடித்து மாலையாக அணிவிப்பதை பக்தர்கள் பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
பொதுவாக இந்த எருக்கம் பூவை விநாயகருக்கு தான் அதிகம் அணிவித்து பார்த்திருப்போம். அதேபோல் வெள்ளை எருக்கம் பூவைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது சிறப்பாகும். இதை தவிர்த்து இந்த பூவினால் வேறு எந்த கடவுள்களுக்கும் பூஜைகளோ, அர்ச்சனையோ செய்வதை பார்த்திருக்க முடியாது.
மேலும் செய்திகள்: Lord Ganesha songs: விநாயகர் சதுர்த்தி நாளில் கேட்க வேண்டிய 6 பத்தி பாடல்கள், உச்சரிக்க வேண்டிய 3 மந்திரங்கள்.
காடுகளில், தோப்பு, மற்றும் வயல் வெளிகளில் விளையக்கூடிய எருக்கம் பூ செடிகளில் மொத்தம் ஒன்பது வகையான செடிகள் உள்ளதாக கூறப்பட்டாலும், இவற்றில் அதிகமாக மக்கள் காணக்கூடியது வெள்ளை எருக்கம் மற்றும் ஊதா கலரில் காணப்படும் எருக்கஞ்செடிகள் தான். இதைத் தவிர பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் கலந்த எருக்கம் பூ செடிகளும் உள்ளது என கூறுகின்றனர். ஆனால் இவற்றை காண்பது மிகவும் அரிது.
கத்தரிப்பு கலர், செடியை அதிகம் நாம் கண்டாலும், வெள்ளை எருக்கம் செடிகள் அனைத்து இடங்களிலும் அதிகம் காண முடியாது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படும். வீட்டில் இந்த செடியை வளர்த்தால் கூட மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என கூறுவார்கள். அதேபோல் வெள்ளை எருக்கம் கொண்டு விநாயகர் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. விநாயகருக்கு உகந்த மலரான இந்த எருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
மேலும் செய்திகள்: இந்த ஒரு பொருளை வாங்கி தலையில் சுற்றி போட்டால் போதும்..உடம்பில் இருந்து தீய சக்தி, பீடை போன்றவை ஓடியே போகும்..
எருக்கம் பூவை பிள்ளையாருக்கு அணிவித்து வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தினமும் காலையில் எருக்கம் பூ கொண்டு விநாயகருக்கு பூஜை செய்துவர வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணவரவு செழிக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. வெள்ளை எருக்கம் கட்டையால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபடுவது வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை அழித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
அதே போல் நம் முன்னோர்கள் சிலர், எருக்கம் செடி வீட்டில் இருந்தால் அபசகுணம் என்று சொல்வார்கள் ஆனால் எருக்கம் செடி வீட்டில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும் மற்றும் தீய சக்திகள் வீட்டை அணுகாது என்கிற நம்பிக்கையும் உள்ளது. எருக்கம் செடி முழுக்க முழுக்க மருத்துவ குணங்களை உள்ளடக்கியது இதன் இலை முதல் வேர் வரை அனைத்தும் மூலிகை, விஷ கடி போன்றவற்றிக்கு மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
எருக்கம் பூவை சமஸ்கிருதத்தில் அர்க்க மலர் என கூறுகிறார்கள். இதன் அர்த்தம் பிள்ளையாருக்கு உயர்ந்த மலர். 'அர்க்கன்' என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோவில்களில் எருக்கஞ்செடியானது தலமரமாக இருக்கின்றது. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட எருக்கம் பூவை, விநாயகர் சதுர்த்தி தினம் அன்று தான் அணிவிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விநாயகருக்கு பூஜை செய்யும் போதெல்லாம் வைக்கலாம். இதனால் மனம் குளிர்ந்து நீங்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பார் பிள்ளையார்.