- Home
- Lifestyle
- இந்த ஒரு பொருளை வாங்கி தலையில் சுற்றி போட்டால் போதும்..உடம்பில் இருந்து தீய சக்தி, பீடை போன்றவை ஓடியே போகும்..
இந்த ஒரு பொருளை வாங்கி தலையில் சுற்றி போட்டால் போதும்..உடம்பில் இருந்து தீய சக்தி, பீடை போன்றவை ஓடியே போகும்..
Arugampul Pariharam: தீய எண்ணங்கள், பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க வாஸ்து, சாஸ்திரம் சில பரிகாரங்கள் நமக்காக வைத்துள்ளது அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Vastu Shastra tips- Do not borrow these 4 things even by mistake read
இன்று நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. வீட்டிற்கு வீடு வாசப்படி இருப்பது போல் வீட்டிற்கு வீடு பிரச்சனை இருக்கும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் எல்லாம் எதனால் ஏற்படுகிறது. என்று நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா..? பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் பிரச்சனை யாராவது மூன்றாவது மனிதரை வைத்தே வருகிறது.
Vastu Tips
முதலில் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களைப் பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. நம்மை விட வசதியில் அதிகமாக உள்ளார்கள், செல்வந்தர்களாக உள்ளார்கள் என்ற எண்ணம் இருக்கவே கூடாது. அதேபோல நாமும் பணக்காரர்களாக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
Vastu TipS
இறைவன் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப இன்பம், துன்பங்கள் கொடுத்துள்ளார். எனவே, நம்முடைய வாழ்க்கையை நம் தான் வாழ வேண்டும். பிறரின் வாழ்க்கையை பார்த்து வாழ ஆசை கொள்ள கூடாது. இந்த வெறுப்பு, இந்த பொறாமை குணம், இந்த வயிற்றெரிச்சல் எல்லாம் பணம் புகழ் இவைகளின் மீது நமக்கு இருக்கக்கூடிய மோகத்தில் வெளிப்பாடு ஆகும். எனவே, முதலில் இவற்றை விட்டு விட வேண்டும்.
எனவே இப்படிப்பட்ட தீய எண்ணங்கள், பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க வாஸ்து, சாஸ்திரம் சில வரைமுறைகளை நமக்காக வைத்துள்ளது அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஒரு கட்டு அருகம்புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய தலையை சுற்றி வலது புறம் இருந்து இடது புறமாக மூன்று முறையும், இடது புறம் இருந்து வலது புறமாக மூன்று முறையும் சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய கணவர், குழந்தைகளுக்கும் இதே போல சுற்றிக் கொள்ளுங்கள்.பிறகு, அந்த அருகம்புல் கட்டை கொண்டு போய் விநாயகரின் பாதங்களில் வைத்துவிட்டுங்கள்.
இதனால், உங்களுடைய கெட்ட எண்ணங்கள் பொறாமை குணம் கோபம் எரிச்சல் தரித்திரம் அனைத்தும் உங்கள் உடம்பை விட்டு நீங்கி விடும் என்பது ஐதீகம். வாரம் ஒருமுறை இந்த திருஷ்டி பரிகாரம், நீங்கள் செய்தால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் திருஷ்டிகளையும் முழுமையாக நீக்கி, குடும்ப பிரச்சினைகளை தீர்க்கும். மேலும், உங்களை அறியாமலேயே நீங்கள் அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து, அதேபோல நாமும் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள்.