MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஒரே மெத்தையை ரொம்ப வருஷமா பயன்படுத்துறீங்களா? இத படிங்க முதல்ல.! எவ்வளவு பிரச்சினைகள் வரும் தெரியுமா?

ஒரே மெத்தையை ரொம்ப வருஷமா பயன்படுத்துறீங்களா? இத படிங்க முதல்ல.! எவ்வளவு பிரச்சினைகள் வரும் தெரியுமா?

How Often Should You Change Your Mattress? : உங்க மெத்தைக்கு காலாவதி தேதி இருக்குன்னு தெரியுமா? பழைய மெத்தையால் ஏற்படும் முதுகுவலி, அலர்ஜி, தூக்கமின்மை பிரச்சனைகள் பற்றி நிபுணர்கள் சொல்ற முழு விவரத்தையும் இங்கே பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 15 2026, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நிம்மதியை கெடுக்கும் பழைய மெத்தைகள்
Image Credit : ChatGpt

நிம்மதியை கெடுக்கும் பழைய மெத்தைகள்

மாறிவரும் காலம் மற்றும் லைஃப்ஸ்டைல், நம்முடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துது. இப்போதெல்லாம் பலரும் தங்களோட படுக்கையறையை தூங்குற இடமா மட்டும் பார்க்காம, ஒரு வெல்னஸ் ரூம் ஆகவும் பார்க்குறாங்க. உடம்புக்குத் தேவையான ஓய்வு விஷயத்துல வெளிச்சம், வெப்பம், சத்தம் மாதிரியே நாம படுக்குற மெத்தையும் முக்கிய பங்கு வகிக்குது.

நல்ல தூக்கத்துக்காக ப்ளூ லைட் ஃபில்டர், ஸ்லீப் டிராக்கிங் ஆப்ஸ் போன்ற நவீன டெக்னாலஜியை நாம பயன்படுத்துறோம். குறிப்பா, கோடை காலத்தில் அதிகமாகுற வெப்பத்தால தூக்கம் தடைபடுது. ஆனா, இது எல்லாத்தையும் விட நாம படுக்குற மெத்தைதான் ரொம்ப முக்கியம்னு பலரும் கவனிக்கிறதில்லை. வீட்ல மத்த பொருட்களை மாத்துற வேகத்துல, மெத்தையை மாத்த யாரும் ஆர்வம் காட்டுறதில்லை. ஆனா, ஒரு பழைய மெத்தை உங்க தூக்கத்தையே கெடுத்துவிடும்னு உங்களுக்குத் தெரியுமா?

25
துக்கமின்னையை ஏற்படுத்தும் மெத்தைகள்
Image Credit : stockPhoto

துக்கமின்னையை ஏற்படுத்தும் மெத்தைகள்

மெத்தை நம்ம உடம்புக்கு சரியான சப்போர்ட் கொடுத்து, தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுது. ஆனா, காலப்போக்குல மெத்தைக்கு உள்ளே இருக்கும் மெக்கானிசம் பழுதாகிடும். அதுல இருக்குற ஃபோம் (foam) அமுங்கிடும், ஸ்பிரிங் அதோட பிடிப்பை இழந்துடும். இதனால மெத்தையோட மேற்பரப்பு சமமா இல்லாம மேடு பள்ளமா மாறிடும். இது தூக்கமின்மையை ஏற்படுத்துறது மட்டுமில்லாம, கடுமையான முதுகுவலிக்கும் காரணமாயிடும். இந்த மாற்றங்கள் ரொம்ப மெதுவா நடக்குறதால, நம்ம மெத்தையே நமக்கு எதிரா வேலை செய்யுதுன்னு நாம உணரவே மாட்டோம்.

Related Articles

Related image1
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Related image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
35
சமநிலையின்மையால் வரும் பிரச்சனைகள்
Image Credit : stockPhoto

சமநிலையின்மையால் வரும் பிரச்சனைகள்

நல்லா தூங்கணும்னா, நம்ம முதுகெலும்பு சரியான நிலையில இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்னு நிபுணர்கள் சொல்றாங்க. மெத்தை பழையதாகி, சரியான சப்போர்ட் கொடுக்காதப்போ, தூக்கத்துல நம்ம உடம்பு தொடர்ந்து நிலையை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கும். இதனால தூக்கத்துல அடிக்கடி முழிப்பு வரும், ஆழ்ந்த தூக்கம் இல்லாம போகும். இந்த நிலையை பலரும், வெப்பம் அதிகமாகுறதாலயோ அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தாலயோ நடக்குதுன்னு நினைப்பாங்க. ஆனா, உண்மையான காரணம் மெத்தையோட ஆயுட்காலம் முடிஞ்சதுதான்.

45
சுத்தமில்லாத மெத்தையால் வரும் நோய்கள்
Image Credit : stockPhoto

சுத்தமில்லாத மெத்தையால் வரும் நோய்கள்

மெத்தை பழசாக பழசாக, அதுல தூசி, கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், அலர்ஜியை உண்டாக்கும் காரணிகள், ஈரப்பதம் எல்லாம் சேர்ந்துடும். மெத்தையின் துணி மற்றும் ஃபோம் லேயர்களுக்கு நடுவுல இதுங்க தங்கிடும். நாம மெத்தைக்கு கவர் போட்டாலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த கிருமிகள் மெத்தைக்கு உள்ளே போயிடும். இதனால சுவாசப் பிரச்சனைகள், அலர்ஜிகள், தூக்கக் கலக்கம் போன்ற தொந்தரவுகளை நாம சந்திப்போம். துரதிர்ஷ்டவசமா, இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணம் மெத்தைதான்னு யாரும் சீக்கிரத்துல சந்தேகப்பட மாட்டாங்க.

55
ஆரோக்கியத்தில் மெத்தையின் பங்கு
Image Credit : stockPhoto

ஆரோக்கியத்தில் மெத்தையின் பங்கு

"மெத்தை என்பது வீட்டில் தினமும் பயன்படுத்தும் ஒரு ஃபர்னிச்சர். ஆனால், பலரும் அதன் ஆயுட்காலத்தை சுத்தமா கண்டுக்கிறதில்லை. மெத்தை எவ்வளவு நல்லா இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது சௌகரியத்துக்கும் சப்போர்ட்டுக்கும் இடையிலான சமநிலையை இழந்துடும். அப்போ உடம்புக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது. அதனால ஆரோக்கியமான வாழ்க்கை பயணத்துல மெத்தையும் ஒரு முக்கியமான அம்சம்" என்று நிபுணர்கள் சொல்றாங்க. நாம எடுக்குற ஒரு சின்ன முடிவு, அதாவது பழைய மெத்தையை மாற்றுவது, நம்ம தூக்கத்திலும் ஆரோக்கியத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
சுகாதார நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Recommended image2
Weight loss: 15 நாட்களில் உங்கள் எடையை குறைக்கலாம்.! எளிய உடற்பயிற்சிகள், ஏற்ற சாப்பாடு இவைதான்.!
Recommended image3
சுட்டெரிக்கும் கோடை வெயில்: லாங் டிரைவ் செல்லும் முன் காரில் கவனிக்க வேண்டிய! Top 5 Important Tips!
Related Stories
Recommended image1
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Recommended image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved