- Home
- Lifestyle
- muttai satham recipe: உதிரி உதிரியாய் டேஸ்டான முட்டை சாதம் செய்வது எப்படி? ஹோட்டல் சுவையை மிஞ்சும் ரகசியக் குறிப்புகள்!
muttai satham recipe: உதிரி உதிரியாய் டேஸ்டான முட்டை சாதம் செய்வது எப்படி? ஹோட்டல் சுவையை மிஞ்சும் ரகசியக் குறிப்புகள்!
இரவு அல்லது மதிய உணவிற்குச் சட்டென்று செய்யக்கூடிய சுவையான முட்டை சாதம்! உணவகங்களில் கிடைப்பது போன்ற காரசாரமான, அசத்தலான தெருவோரக் கடை பாணி முட்டை சாதத்தை வீடே மணக்க எளிய முறையில் செய்ய இதோ ரெசிபி. மீதமான சாதத்திலும் செய்யலாம்!

உதிரியான முட்டை சாதத்திற்கான எளிய செய்முறை :
அவசர காலங்களில் சட்டென்று செய்யக்கூடிய, அதே சமயம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முட்டை சாதம் முதன்மையானது. வீடுகளில் முட்டை சாதம் செய்யும்போது சாதம் குழைந்து போவது, அல்லது முட்டையின் காரமான வாசனை அடிப்பது பலருக்குப் பெரிய சவாலாக இருக்கும். உணவகங்களில் பரிமாறப்படும் முட்டை சாதத்தைப் போல, ஒவ்வொரு பருக்கையும் தனித்தனியாக உதிரி உதிரியாகவும், நாவில் ஒட்டிக்கும் கொள்ளும் நறுமணத்தோடும் வீட்டிலேயே மிக எளிதாகச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சாதத்தைப் பதப்படுத்துதல்:
வடித்த சாதத்தைப் பாத்திரத்தில் இருந்து அகலமான தட்டில் கொட்டி, சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் கலந்து ஆறவிட வேண்டும். சாதம் நன்றாக ஆறிய பின்னரே முட்டையோடு சேர்க்க வேண்டும்.
முட்டையை வறுக்கும் பதம்:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, முட்டையை ஊற்றியவுடன் உடனடியாகக் கிளறக் கூடாது. லேசாக வெந்த பிறகே பெரிய துண்டுகளாக உடையுமாறு மெதுவாகக் கிளறி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மசாலா மற்றும் காய்கறிகள் வதக்கல்:
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய கோஸ், கேரட் ஆகியவற்றை அதிக தீயில் வைத்து (High Flame) லேசான நறுக்கு (Crunchy) பதம் மாறாமல் வதக்க வேண்டும்.
மசாலாப் பொடிகளின் சேர்க்கை:
கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு சோயா சாஸ் சேர்த்தால் ஹோட்டல் சுவை அப்படியே கிடைக்கும்.
ஒன்றிணைக்கும் முறை:
வதக்கிய மசாலா கலவையுடன் ஆறவைத்த சாதம் மற்றும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து, அதிக தீயில் வைத்து மெதுவாக அடியிலிருந்து பிரட்டி எடுக்க வேண்டும். இறுதியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் மிளகுத்தூள் தூவி இறக்கினால், உதிரி உதிரியான முட்டை சாதம் தயார்.
ருசிகரமான டிப்:
முட்டையை வறுக்கும் போதே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் லேசாக எலுமிச்சைச் சாறு பிழிந்து வறுத்தால், முட்டையின் கவுச்சி வாசனை முற்றிலுமாக நீங்கி சாதம் தனித்துவமான நறுமணத்துடன் இருக்கும்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

