MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • திருமண தடையை நீக்கும் மருதாணி பரிகாரம்..! 4 இலை போதும் உங்க பொண்ணு - பையனுக்கு சீக்கிரம் டும் டும் டும்..!

திருமண தடையை நீக்கும் மருதாணி பரிகாரம்..! 4 இலை போதும் உங்க பொண்ணு - பையனுக்கு சீக்கிரம் டும் டும் டும்..!

திருமண தடைகள் நீங்கி, உங்களது மகள் - மகளுக்கு திருமணம் கை  கூட வைக்கும் மருதாணி தீப பரிகாரம் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 14 2022, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒரு பிள்ளையை பெற்றெடுத்தது முதல், சரியான நேரத்தில் உணவு கொடுப்பதில் துவங்கி, படிப்பு, அவர்களின் வருங்காலம் வேலை என அனைத்தையும் நினைத்து தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறார்கள். அந்த வகையில் தங்களின் பிள்ளைகள் திருமணம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். சிலருக்கு திருமணம் உடனே கைகூடி விட்டாலும், சிலருக்கு தோஷம், திருமண தடை, வசதி, படிப்பு, சரியான வேலை இல்லாமை, போன்ற காரணத்தால் திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறது.
 

25

திருமண வயதை கடந்த பின்னரும் திருமணம் நடைபெறாமல் பிள்ளைகள் இருப்பது பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை கொடுக்கிறது என்றும் கூறலாம். இப்படி உங்கள் பிள்ளைகள், அல்லது உங்களது நண்பர்கள் பிள்ளைகள் யாராவது திருமணம் ஆகாமல் இருந்தால்... இந்த மருதாணி இலை தீப பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள். 5 வாரத்தில் திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
 

35

இதை செய்யும் முறையும் மிகவும் எளிமை தான்... பெண்களாக இருந்தால், வெள்ளிக்கிழமை  அன்று இரண்டு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அகல்விளக்கிலும் இரண்டு மருதாணி இலைகளை போட்டு, தொடர்ந்து 5 வாரங்கள் தீபம் ஏற்றி வரவேண்டும். அப்போது திருமணம் ஆகாத அந்த பெண், மனதார அம்மன் முன்பு நின்று, தனக்கு தாலி பாக்கியத்தை அந்த அம்பாள் அருளவேண்டும் என, உருக்கமாக வேண்டிக்கொள்ளவேண்டும். இது மிக விரைவாக அந்த பெண்ணுக்கு திருமண வரத்தை பெற்று தரும்.

45

ஆண்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை விநாயகர் கோவிலில் செய்ய வேண்டும். அதே போல்  ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்பு. ஆண்கள் அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி அதில் ஒவ்வொரு அகலிலும் இரண்டு மருதாணி இலையை போட்டு மனம் உருகி, அந்த விநாயக பெருமானை 5 வாரங்கள் வேண்டிக்கொள்ள, திருமண தடை நீங்கி... கல்யாண யோகம் கூடி வரும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்: வெறும் 20 ரூபாய் போதும்..! இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால்.. பிரச்சனை தீர்ந்து.. பின் நிகழும் அதிசயம்!
 

55

பொதுவாக மருதாணி இலையில்... அந்த மகாலட்சுமியே குடி இருக்கிறாள் என்பது ஐதீகம்... அவளையே சாட்சியாக வைத்து தீபம் ஏற்றினால், உங்களின் குறையை நிறைவேற்றலாம் போய்விடுவாளா? நம்பிக்கையோடு மருதாணி இலை தீபம் போட்டு மகாலட்சுமியின் அருளை பெறுவோம்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved