- Home
- Lifestyle
- Most Stolen Item : தங்கம், வைரமெல்லாம் இல்ல... உலகில் அதிகம் திருடப்படும் பொருள் எது தெரியுமா?
Most Stolen Item : தங்கம், வைரமெல்லாம் இல்ல... உலகில் அதிகம் திருடப்படும் பொருள் எது தெரியுமா?
World's Most Frequently Stolen Product : உலகில் திருடர்களால் அதிகம் திருடப்படும் பொருள் என்ன என்பது குறித்த அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

World's Most Frequently Stolen Product
மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டில் சென்று தான் வாங்குவார்கள். அவற்றில் உலகளவில் அதிகம் திருடப்படும் பொருள் எது என்று கேட்டால், நம்மில் பலர் தங்கம், வைரம் என்றுதான் சொல்வோம். ஆனால், உண்மையில் அது சீஸ் (Cheese) தானாம். பிரிட்டனைச் சேர்ந்த 'சென்டர் ஃபார் ரீடெய்ல் ரிசர்ச்' நடத்திய ஆய்வின்படி, கடைகளுக்கு வரும் மொத்த சீஸ் ஸ்டாக்கில் சுமார் 4% திருட்டுப் போகிறதாம். இது இப்போது ஒரு பெரிய சர்வதேசப் பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது.
ஏன் சீஸ் இவ்வளவு திருடு போகிறது?
சீஸ் அதிகம் திருடப்படுவதற்கான முக்கிய காரணம் அதன் அதிக விலை மற்றும் டிமாண்ட். திருடர்கள் இதைத் திருடி, ரெஸ்டாரன்ட்கள் அல்லது சின்ன கடைகளுக்கு குறைந்த விலையில் விற்கிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு பெரிய 'பிளாக் மார்க்கெட்டே' இயங்குகிறதாம். சீஸ் சீக்கிரம் கெட்டுப்போகாது என்பதும் திருடர்களுக்கு வசதியாக இருக்கிறது. சீஸுக்கு அடுத்தபடியாக இறைச்சி, சாக்லேட், மது, கடல் உணவுகள், மற்றும் குழந்தைகளின் பால் பவுடர் போன்றவை அதிகம் திருடப்படுகின்றன.
இதை நோட் பண்ணீருக்கீங்களா?
பிரிட்டனில் ஒருமுறை, திருடர்கள் ஒரே இரவில் லாரிகளில் வந்து 22 டன் சீஸை திருடிச் சென்றிருக்கிறார்கள். இந்தத் திருட்டைத் தடுக்க, சூப்பர் மார்க்கெட்டுகள் இப்போது செக்யூரிட்டி டேக், சிசிடிவி கேமரா, மற்றும் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அடுத்தமுறை நீங்கள் சூப்பர் மார்க்கெட் சென்றால், சீஸ் இருக்கும் இடத்தில் எத்தனை கேமரா இருக்கிறது என்று பாருங்கள். ஒரு சீஸ் துண்டுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய க்ரைம் ஸ்டோரி இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.
சீஸ் பிரியர்கள்
சாப்பாட்டு பிரியர்கள் மத்தியில சீஸுக்கு இருக்கிற ஃபேன் பேஸ் வேற எதுக்கும் இருக்காது. பிட்சாவுல நூல் மாதிரி நீண்டு வர்ற சீஸா இருந்தாலும் சரி, பர்கர்ல உருகி வழியிற சீஸா இருந்தாலும் சரி, சாண்ட்விச்ல வச்ச ஒரு ஸ்லைஸ் சீஸா இருந்தாலும் சரி, அதோட டேஸ்ட்டே தனிதான். சீஸோட வரலாற்றைப் பார்த்தா, அது நம்மள கிட்டத்தட்ட 8,000 வருஷங்களுக்கு முன்னாடி இருந்த கற்காலத்துக்கு கூட்டிட்டுப் போகும். சீஸ் கண்டுபிடிக்கப்பட்டதுக்குப் பின்னால ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.
சீஸ் வரலாறு
பழங்காலத்துல, அரேபிய வியாபாரிகள் பாலைவனத்துல பயணம் செய்யும்போது, ஆடு மாதிரியான விலங்குகளோட வயிற்றுப் பகுதியால செய்யப்பட்ட தோல் பைகள்லதான் பால சேமிச்சு வைப்பாங்க. ஒருமுறை, ஒரு வியாபாரி தன்னோட பயணத்தின்போது தாகத்துக்காக பையைத் திறந்து பார்த்தப்போ, பால் கெட்டியாகி, அதுல இருந்து தெளிவான ஒரு திரவம் பிரிஞ்சு வந்ததைப் பார்த்தார். விலங்கோட வயித்துல இருந்த 'ரென்னெட்' (Rennet) என்ற என்சைமும், பயணத்தோட வெப்பமும், பையோட குலுக்கலும் சேர்ந்து பாலை இயற்கையா சீஸா மாத்திருச்சு. பசியும் தாகமும் தாங்காம, அவர் அதை சாப்பிட்டுப் பார்த்தப்போ, அதோட வித்தியாசமான சுவை அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இப்படித்தான் உலகத்துக்கு சீஸ் என்ற அற்புதமான உணவு கிடைச்சதா ஒரு கதை சொல்லப்படுது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

