MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Oats Recipes: இட்லி, தோசை செய்ய அரிசி, உளுந்தெல்லாம் வேண்டாம்! யாருக்கும் தெரியாத ஹெல்தி சாப்பாடு.!

Oats Recipes: இட்லி, தோசை செய்ய அரிசி, உளுந்தெல்லாம் வேண்டாம்! யாருக்கும் தெரியாத ஹெல்தி சாப்பாடு.!

Healthy South Indian Breakfast Ideas with Oats, தென்னிந்திய உணவுகள்னா யாருக்குத்தான் பிடிக்காது?  அரிசி, உளுந்தை சேர்க்காமலேயே இட்லி, தோசை போன்றவற்றை செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 12 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தோசையம்மா தோசை.!

தோசையம்மா தோசை.!

சாதா ஓட்ஸை கொஞ்ச நேரம் தண்ணியில ஊறவைங்க. அப்புறம் தண்ணி சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைச்சுக்கோங்க. இதுல உப்பு, புளிக்கிறதுக்காக கொஞ்சம் எலுமிச்சை சாறு, ஈனோ சேர்த்தா போதும். சாதாரண தோசை மாதிரியே நான்-ஸ்டிக் தவால ஊத்தி, உள்ள உருளைக்கிழங்கு அல்லது பனீர் மசாலா வெச்சு பரிமாறுங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காலை டிபனுக்கு ஹெல்த்தியா ஏதாவது சாப்பிடணுமா?

காலை டிபனுக்கு ஹெல்த்தியா ஏதாவது சாப்பிடணுமா?

அப்போ ஓட்ஸ் இட்லி செஞ்சு பாருங்க. சட்டென்று செஞ்சிடலாம். முதல்ல ஓட்ஸை ஒரு வாணலியில் லேசா வறுத்து, ஆறினதும் பொடி பண்ணிக்கோங்க. இந்த பொடியோட அரை கப் ரவை, தயிர் சேர்த்து கலந்து கொஞ்ச நேரம் வைங்க. அப்புறம் உப்பு, ஃப்ரூட் சால்ட் சேர்த்து இட்லி தட்டுல ஊத்தி வேக வைங்க. விருப்பப்பட்டா காய்கறிகளையும் சேர்த்து மிக்ஸ்டு வெஜ் ஓட்ஸ் இட்லியா செய்யலாம். 

Related Articles

Related image1
Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!
Related image2
Vegetarian Food: சைவம்னு நினைச்சு சாப்பிடுறீங்களா? இந்த 5 பொருட்களும் அசைவம்தான்!
35
உளுந்து இல்லாத மெது வடை, சாம்பார் வடை

உளுந்து இல்லாத மெது வடை, சாம்பார் வடை

மெது வடை, சாம்பார் வடை எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா உளுந்து சிலருக்கு செரிக்காது. அதுக்கு பதிலா ஓட்ஸ்ல வடை செய்யலாம். ஓட்ஸை எடுத்து பொடி பண்ணிக்கோங்க. அதுல கொஞ்சம் அரிசி மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகுத்தூள், அரை கப் தயிர் சேர்த்து மாவு பிசைஞ்சுக்கோங்க. அப்புறம் சின்ன உருண்டையா தட்டி, நடுவுல ஓட்டை போட்டு, பொன்னிறமா பொரிச்சு எடுங்க.
45
 உப்புமா செய்வோமா?

உப்புமா செய்வோமா?

ஓட்ஸ் உப்புமா செய்ய, முதல்ல ஓட்ஸை மிதமான தீயில வறுத்து எடுத்துக்கோங்க. அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்குங்க. அப்புறம் கேரட், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து கொஞ்ச நேரம் வேகவிடுங்க. இப்போ ஓட்ஸை சேர்த்து நல்லா கலந்து, 1 கப் தண்ணி ஊத்தி மூடி போட்டு வேக வைங்க. சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி. மேல கொத்தமல்லி, எலுமிச்சை சாறு தூவி பரிமாறுங்க.
55
ஓட்ஸ் ஊத்தப்பம் செய்யலாம்

ஓட்ஸ் ஊத்தப்பம் செய்யலாம்

ஓட்ஸ் ஊத்தப்பம் செய்ய, முதல்ல ஓட்ஸை பொடி பண்ணிக்கோங்க. அதுல அரை கப் ரவை, தயிர் சேர்த்து கொஞ்ச நேரம் ஊறவைங்க. அப்புறம் வெங்காயம், தக்காளி, கேரட், குடைமிளகாய் மாதிரி உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை சேர்த்து கெட்டியான மாவு தயார் பண்ணுங்க. தோசைக்கல்லில் கொஞ்சம் கனமா ஊத்தி, எண்ணெய் விட்டு ரெண்டு பக்கமும் பொன்னிறமா சுட்டு எடுங்க. இத உங்க விருப்பமான சட்னியோட பரிமாறுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
உணவு சேர்க்கைகள்
உடற்பயிற்சிக்கான உணவுகள்
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Banana: காலையில் வாழைப்பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? இந்த 5 பலன்கள் தெரியுமா?
Recommended image2
Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
Recommended image3
Home Decor: வீட்டை இயற்கையாக அழகுபடுத்த 5 எளிய வழிகள்: சூழல் நட்பு இல்ல அலங்கார டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!
Recommended image2
Vegetarian Food: சைவம்னு நினைச்சு சாப்பிடுறீங்களா? இந்த 5 பொருட்களும் அசைவம்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved