- Home
- Lifestyle
- Vegetables : எல்லா காய்கறிகளையும் பிரிட்ஜில் வைக்குறீங்களா? இனி அந்த தப்பு பண்ணாதீங்க; இது டேஞ்சர்
Vegetables : எல்லா காய்கறிகளையும் பிரிட்ஜில் வைக்குறீங்களா? இனி அந்த தப்பு பண்ணாதீங்க; இது டேஞ்சர்
ஃப்ரிட்ஜில் என்னென்ன காய்கறிகளை வைக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Vegetables You Shouldn’t Refrigerate
பொதுவாக நம்முடைய வீடுகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைப்போம். அதுவும் குறிப்பாக பலர் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கிறார்கள். இருப்பினும் எல்லா வகையான காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே எந்தெந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்
கிட்டத்தட்ட நம் அனைவருடைய வீடுகளிலும் வெள்ளரிக்காயை ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால் ஃப்ரிட்ஜில் வெள்ளரிக்காயை ஒருபோதும் வைக்கவே கூடாது. அதுவும் 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை இருந்தால் வெள்ளரிக்காய் சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். எனவே வெள்ளரிக்கையை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்காதீர்கள்.
தக்காளி
ஃப்ரிட்ஜில் தக்காளியை வைத்தால் அதன் சுவை குறைந்துவிடும். எனவே தக்காளியை எப்போதுமே அறையின் வெப்பநிலையிலேயே சேமிக்க வேண்டும். சேமிக்க வேண்டுமானால் ஒரு கூடையில் வைத்து சேமியுங்கள் தக்காளி பிரஷ்ஷாக இருக்கும்.
உருளைக்கிழங்கு
கிட்டத்தட்ட எல்லா வீட்டு சமையலறையிலும் கண்டிப்பாக உருளைக்கிழங்கு இருக்கும். ஆனால் உருளைக்கிழங்கை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்கவே வேண்டாம். ஏனெனில் அவை கெட்டுப்போய் முளைக்க வழி வகுப்போம்.
வெங்காயம்
வெங்காயத்தையும் பிரிட்ஜில் சேமிக்க கூடாது. பிரிட்ஜில் வைத்தால் அவை விரைவில் கெட்டுவிடும். எனவே வெங்காயத்தை குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும்.