- Home
- Lifestyle
- Monsoon Vegetables Storage Hacks : மழை நேரம் காய்கறிகள் சீக்கிரமே அழுகாமல் ப்ரெஷா இருக்கனுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!
Monsoon Vegetables Storage Hacks : மழை நேரம் காய்கறிகள் சீக்கிரமே அழுகாமல் ப்ரெஷா இருக்கனுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் காய்கறிகள் சீக்கிரமே கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க சில குறிப்புகள் இங்கே.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
மழைக்காலத்தில் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க
மழைக்காலம் வந்தாலே கூடவே சில பிரச்சனைகளும் சேர்ந்து வந்துவிடும். அதாவது குழந்தைகளுக்கு உடல் நல பாதிக்கப்படும் என்பது பெற்றோரின் பிரச்சனை, வேலைக்கு செல்பவர்களுக்கு சாலை நசநசவென்று இருக்கும் என்பது ஒரு பிரச்சனை, பெண்களுக்கு மழையால் மேக்கப் கலைந்து விடும் என்பது பிரச்சனை. இப்படி ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது. அந்த வகையில் இல்லத்தரசிகள் மழைக்காலத்தில் வாங்கி வைத்த காய்கறிகள் சீக்கிரமாக கெட்டுப் போய் விடுமே என்பது அவர்களது பிரச்சினை. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும். அது என்ன என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
காய்கறிகளை கழுவு!
பொதுவாக மழை காலத்தில் காய்கறிகளில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகமாகவே இருக்கும். எனவே அவற்றை நீங்கள் சேமிப்பதற்கு முன் முதலில் உப்பு மஞ்சள் கலந்த நீரில் நன்றாக கழுவி, உலர்ந்த பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளில் சேமிப்பது :
பச்சை மிளகாய், கேப்சிகம், முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளை பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைத்தால் அவற்றின் உள்ளே ஈரப்பதம் செல்லாமல் இருக்க, கவரில் சில துறைகளை உருவாக்குங்கள். இதனால் காய்கறிகள் சீக்கிரமாக கெட்டுப்போவது தடுக்கப்படும். நீண்ட நாள் பிரஷாகவும் இருக்கும்.
இலை காய்கறிகள் சேமிக்கும் முறை :
மழைக்காலத்தில் கீரை, கொத்தமல்லி இலை, புதினா இலை போன்ற இலை காய்களை சேமிப்பது சற்று கடினம். ஏனெனில் அவை ஈரப்பதமாகவும், சீக்கிரமாகவே அழுகும் தன்மை இருக்கும். இதற்கு பச்சை இலை காய்கறிகளின் வேர்களை வெட்டி அவற்றை நன்கு கழுவி உலர்ந்த பிறகு ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் சேமிப்பது எப்படி?
நம் ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் வெங்காய மற்றும் உருளைக்கிழங்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் மழைக்காலத்தில் இவற்றை முறையாக சேமிக்காவிட்டால் சீக்கிரமாகவே கெட்டுவிடும். இத்தகைய சூழ்நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் முளைப்பதை தடுக்க அவற்றை உலர்ந்து இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும்.
ஒன்றாக சேமிக்காதே!
பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக சேமிக்க வேண்டாம். ஏனெனில் பழங்கள் பழுக்கும்போது அது எத்தலின் வாயுவை வெளியிடும் இது காய்கறிகளின் ஆயுளை குறைக்கும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக சேமிக்காமல், தனித்தனியாக சேமிப்பது தான் சிறந்தது.
ஃப்ரிட்ஜை சுத்தம் செய்!
உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம். அதுவும் மழைக்காலத்தில் அது இன்னும் முக்கியமானது. பிரிட்ஜ் சுத்தமாக இல்லையெனில் அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்து காய்கறிகளை விரைவாக கெட்டுவிடும். எனவே ஃப்ரிட்ஜை வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவையை வைத்து சுத்தம் செய்து பிறகு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதில் சேமிக்கவும்.