- Home
- Lifestyle
- Black Eyed Beans : காராமணியை சாதாரணமா எடை போட்டாதீங்க! இந்த நோய்களுக்கு இதுதான் அருமருந்து.. உடனே படிங்க
Black Eyed Beans : காராமணியை சாதாரணமா எடை போட்டாதீங்க! இந்த நோய்களுக்கு இதுதான் அருமருந்து.. உடனே படிங்க
காராமணி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக நாம் காராமணியை அதிகமாக சமைத்து சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மெக்னீசியம், சோடியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் ஏராளமான வைட்டமின்கள் என நம் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து வயிறை நீண்ட நேரம் நிரப்பியதாக உணர வைக்கிறது. இதனால் பசி எடுக்காது. எனவே எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்கள் காராமணியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை வரும். காராமணியில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை வருவதை தடுக்கிறது.
காராமணியில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை ஆரோக்கியமாக்கி, பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் விரைவிலேயே முதிர்ச்சி அடைவதை தடை செய்து, இளமையாக வைக்கவும் உதவுகிறது.
காராமணியில் ஃபோலேட் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் இது நல்லது. இது கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது தவிர இதில் இருக்கும் கல்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
காராமணியில் இருக்கும் மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை சீராக்கி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் உடல் சோர்வினை போக்கவும், நல்ல தூக்கத்திற்கும் இது உதவும்.