MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தொட்டவை துலங்கும்... கடவுளே சீதனம் கொடுத்து நன்றி சொல்லும் ஆடி பெருக்கின் சிறப்புக்கள்!

தொட்டவை துலங்கும்... கடவுளே சீதனம் கொடுத்து நன்றி சொல்லும் ஆடி பெருக்கின் சிறப்புக்கள்!

நம் முன்னோர்கள் காலம் தொட்டு, தற்போது வரை கொண்டாடப்பட்டு வரும் ஆடி பெருக்கு ஏன் கொண்டாட படுகிறது என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 02 2022, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஆடி பெருக்கு, ஆடி 18, தாலி பெருக்கு, என பல பெயர்களால் கொண்டாட பட்டு வரும் இந்த நிகழ்வு, காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாகவே நம் முன்னோர்களால் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. 
 

26

குறிப்பாக விவாசாய பெருமக்கள், அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரி தண்ணீருக்கு இன்றைய தினம், ஆற்றங்கரைக்கு சென்று காப்பரிசி கிளறி வைத்து, 5  வகையான கலவை சாதம் வைத்து, காவிரி ஆற்றில் மஞ்சள், பூ போன்ற மங்கள பொருட்களை விட்டு, தீபாராதனை காட்டி வணங்குவார்கள். 

மேலும் செய்திகள்: குழந்தையாக தொட்டிலில் தவழும் தளபதி விஜய்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இதோ..!
 

36

மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், நூலில் மஞ்சள் நனைத்து அந்த கயிற்றை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டி கொள்ளும் வழக்கமும் தற்போது வரை இருந்து வருகிறது. 

46

அதே போல் இந்த நாளில், தொட்டவை எல்லாம் பெருகும் என்கிற ஐதீகவும் உள்ளதால், தொழில் துவங்குவது, புது பெண்களின் தாலி பிரித்து கட்டுவது, ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாலி கயிறை மாற்றிக்கொள்வது போன்றவற்றை செய்கிறார்கள். பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யமாட்டார்கள். ஆனால் ஆடி 18 அன்று சுப காரியங்கள் செய்ய உகர்ந்தது என்றும் இன்றிய நாள் நல்ல காரியங்கள் செய்தால் அது பன்மடங்கு அதிகமாகும் என கூறுகிறது ஐதீகம்.

மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!
 

56

காவிரி தாய்க்கு நாம் மட்டும். நன்றி சொல்ல வில்லை, அந்த எம்பெருமானும் சீர் செய்து நன்றி சொல்வர். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள நம்பெருமாள் இன்றைய தினம் காவிரிக்கு சீர் செய்ய இன்றைய தினம் ஆற்றங்கரைக்கு வருவார். பின்னர் காவிரி தாய்க்கு புடவை, மஞ்சள், குங்குமம், தாலி, பழங்கள், மலர்கள்... போன்றவற்றை சீதனமாக கொடுப்பார்.

66

என்றென்றும் மக்களை வலமாக வைத்து கொள்ள வேண்டும் என இந்த சீதனங்களை கொடுத்து காலை முதல் மாலை வரை காவிரியின் அழகை எம்பெருமான் ரசித்து விட்டு செல்வது வழக்கம். 

மேலும் செய்திகள்: அட கடவுளே.. ரூ.76,000 கொடுக்காததால் விஜய் வாழ்ந்த வீட்டின் மீது சொத்து பறிமுதல் நடவடிக்கை- நீதிமன்றம் உத்தரவு!
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved