MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாத்ரூம் டைல்ஸ் கஷ்டமே இல்லாமல் பளீச்சென ஆக்க ஈஸியான 5 வழிகள்

பாத்ரூம் டைல்ஸ் கஷ்டமே இல்லாமல் பளீச்சென ஆக்க ஈஸியான 5 வழிகள்

பாத்ரூம் கறைகளைத் தேய்த்துக் கைகள் வலிக்கத் தேவையில்லை! இனி சமையலறைப் பொருட்களைக் கொண்டே, விடாப்பிடியான கறைகளை எளிதாக நீக்கி, டைல்ஸை 'பளீச்' என மாற்றலாம். பாத்ரூமைச் சிரமமின்றிச் சுத்தமாக்க இதோ 5 எளிய மற்றும் புதிய டிப்ஸ்!

1 Min read
Author : Priya Velan
Published : May 20 2026, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெந்நீர் உருளைக்கிழங்கு ஜூஸ்
Image Credit : Getty

வெந்நீர் உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை கொஞ்சம் வெந்நீரில் கலக்கவும். இந்த கலவையை டைல்ஸ் மற்றும் மூலைகளில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் ஊற விடுங்கள். உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் மற்றும் அமிலத்தன்மை, டைல்ஸில் படிந்திருக்கும் உப்புக்கறைகளை மிக எளிதாக தளர்த்திவிடும். பிறகு லேசாக துடைத்தாலே போதும், டைல்ஸ் மின்னும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எலுமிச்சை உப்பு ஸ்க்ரப்
Image Credit : Getty

எலுமிச்சை உப்பு ஸ்க்ரப்

ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதன் மேல் சமையல் உப்பை (கல் உப்பு அல்ல, தூள் உப்பு) தூவிக் கொள்ளுங்கள். இதை அப்படியே டைல்ஸ் கறைகள் மீது தேயுங்கள். எலுமிச்சையின் சிட்ரிக் அமிலமும், உப்பின் கரகரப்பு தன்மையும் சேர்ந்து காஸ்ட்லி கிளீனர்களை விட வேகமாக கறைகளை அகற்றும். பாத்ரூமும் செம்ம வாசனையாக மாறும்!

35
மவுத்வாஷ் மேஜிக்
Image Credit : Getty

மவுத்வாஷ் மேஜிக்

டைல்ஸ்களுக்கு நடுவில் இருக்கும் வெள்ளை கோடுகளில் (Grout) கருப்பு கறை படிந்திருக்கா? வீட்டில் இருக்கும் புதினா மவுத்வாஷை (Mouthwash) ஒரு பழைய பிரஷில் தொட்டு அந்த இடங்களில் தேயுங்கள். மவுத்வாஷில் உள்ள கிருமிநாசினிகள் மற்றும் ஆல்கஹால் தன்மை, அங்கு படிந்திருக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை வேரோடு அழித்து, கருப்பு நிறத்தை மாயமாய் மறைக்கும்.

45
ஷாம்பு சமையல் சோடா பேஸ்ட்
Image Credit : Getty

ஷாம்பு சமையல் சோடா பேஸ்ட்

காலியான அல்லது ஏதோ ஒரு மலிவான ஷாம்பூவுடன் கொஞ்சம் பேக்கிங் சோடா (சமையல் சோடா) கலந்து பேஸ்ட் போல ஆக்குங்கள். இதை டைல்ஸ் மீது தடவி 5 நிமிடம் கழித்து தண்ணீரை ஊற்றி கழுவவும். ஷாம்பூவின் நறுமணமும் வழுவழுப்பு தன்மையும், பேக்கிங் சோடாவின் அழுக்கு நீக்கும் திறனும் இணையும் போது, கறைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

55
மெழுகுவத்தி தந்திரம்
Image Credit : Getty

மெழுகுவத்தி தந்திரம்

டைல்ஸை சுத்தம் செய்த பிறகு, அவை எப்போதும் சுத்தமாக இருக்க ஒரு வழி இருக்கு. டைல்ஸ்களுக்கு நடுவில் உள்ள வெள்ளை கோடுகளில் ஒரு சாதாரண வெள்ளை மெழுகுவத்தியை வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். மெழுகு ஒரு வாட்டர்-புரூஃப் லேயரை உருவாக்கும். இதனால் அடுத்த முறை நீங்கள் குளிக்கும் போது சோப்பு தண்ணீரோ அல்லது உப்பு தண்ணீரோ அந்த கோடுகளில் ஒட்டாது. கறைகளும் படியாது!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வீட்டு அலங்காரம்
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Clothes Washing Tips: துணிகள் பளிச்சென்று வரவில்லையா? வாஷிங் மெஷினில் நீங்க செய்யும் தவறு இதுதான்
Recommended image2
2016 vs 2026 : தங்கம் டூ ஒரு கிரவுண்டு நிலம்... 10 வருஷத்துக்கு முன்பு என்ன விலை? இப்போது எவ்வளவு?
Recommended image3
Medicine Storage: மாத்திரைகள், மருந்துகளை இந்த இடங்களில் வைக்காதீர்கள்! எங்கெல்லாம் தெரியுமா?
Related Stories
Recommended image1
Bathroom Tiles : ஒரே ஒரு பொருள்!! மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை பளபளக்க வைக்கும் தெரியுமா? சிம்பிள் டிப்ஸ்
Recommended image2
Bathroom Cleaning Mistakes : பாத்ரூமை கழுவுறப்ப இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க.. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குமே கெடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved