- Home
- Lifestyle
- Bathroom Tiles : ஒரே ஒரு பொருள்!! மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை பளபளக்க வைக்கும் தெரியுமா? சிம்பிள் டிப்ஸ்
Bathroom Tiles : ஒரே ஒரு பொருள்!! மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை பளபளக்க வைக்கும் தெரியுமா? சிம்பிள் டிப்ஸ்
பாத்ரூம் டைல்ஸ்களில் இருக்கும் விடாப்படியான கறைகளை சுலபமாக சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்கள் இங்கே.

Bathroom Tiles Cleaning Tips
நாம் என்னதான் பார்த்து பார்த்து வீட்டை சுத்தம் செய்தாலும் கிருமிகளும், அழுக்குகளும் அதிகமாக தேங்கும் கழிவறை மற்றும் குளியலறையை தினமும் சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். இதனால் பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் விடப்படியான மஞ்சள் கறையாக படிந்து விடுகின்றன. கை வலிக்க வலிக்க தேய்த்து சுத்தம் செய்தாலும் அந்த கறையை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது. ஆனால் இனி அந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை. ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி பாத்ரூம் டைல்ஸில் கறைகள் ஏதும் இல்லாமல் கண்ணாடி மாதிரி பளபளக்க செய்யலாம். அது என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.
வினிகர் பயன்பாடு :
பாத்ரூம் டைல்ஸை மிக எளிதாக சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்துங்கள். இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டில் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்து அதை டைல்ஸ் மீது தெளிக்கவும். பிறகு துடைப்பம் அல்லது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்தால் போதும், கறை முற்றிலும் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா பயன்படுத்துங்கள் :
பேக்கிங் சோடா சூப்பரான துப்புரவு முகவரி ஆகும். இது பாத்ரூம் டைல்ஸில் இருக்கும் எப்பேற்பட்ட கடினமான கறைகளையும் நொடியில் அகற்றி விடும். இதற்கு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை டைல்ஸ் மீது தடவி சிறிது நேரம் கழித்து துடைப்பம் கொண்டு சுத்தம் செய்யவும். பேக்கிங் சோடா உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் கறையை நீக்கி டைல்ஸை பிரகாசமாக மாற்றும்.
வெந்நீர் :
ஒரு வாளியில் சூடான நீர் ஊற்றி அதில் வினிகர் கலந்து அந்த கலவையை பாத்ரூம் டைல்ஸ் மீது ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் புதுசு போல மின்னும்.
இதில் கவனம் :
- வீட்டிற்கும் சூரியனின் எவ்வளவு முக்கியமோ அதைவிட பாத்ரூமில் அதன் ஒளி கண்டிப்பாக இருக்க வேண்டும். பாத்ரூமில் போதிய அளவு சூரிய வெளிச்சம் இருந்தால் கறை படியாது. துர்நாற்றமும் வீசாது.
- இதுபோல பாத்ரூம் எப்போதுமே அதிக காற்றோட்டம் இருந்தால் துர்நாற்றம் வீசாது. பாத்ரூம் டைல்ஸ் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொண்டாலும் துர்நாற்றம் அடிக்காது.
- பாத்ரூமில் இருக்கும் ஜன்னல்களை முடிந்தவரை திறந்து வையுங்கள். இதனால் ஈரப்பதம் தாங்காது. இல்லையெனில் அழுக்குகள், கிருமிகள் ஒட்டிக் கொள்ளும்.
- பாத்ரூம் டைல்ஸில் அவ்வப்போது சின்ன சின்ன கறைகள் இருக்கும் போது அதை உடனே சுத்தம் செய்து விடுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள டிப்ஸ்கள் அதிக ரசாயன கலப்புகள் இல்லை என்பதால், அதனால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் அவை பாத்ரூம் டைல்ஸ் கறைகளை நீக்குவது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.