- Home
- Lifestyle
- Bathroom Smell : ஒரே ஒரு பொருள் தான்! பாத்ரூம்ல வாசனை கம கமன்னு வீசும்; இப்படி '1' முறை பண்ணுங்க
Bathroom Smell : ஒரே ஒரு பொருள் தான்! பாத்ரூம்ல வாசனை கம கமன்னு வீசும்; இப்படி '1' முறை பண்ணுங்க
இந்த பதிவில் பாத்ரூமை எப்படி நறுமணமாக வைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.

Bathroom Smell Good Hacks
நாம் நம்முடைய வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதுபோல தான் பாத்ரூமையும் சுத்தமாக வைக்க வேண்டும். ஏனெனில் பாத்ரூமில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருப்பதால், பரவ வாய்ப்பு அதிகம் உள்ளன. சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமல் எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு விருந்தினர் வந்தால் பாத்ரூமில் நாத்தம் அடித்தால் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். இதற்காக நீங்கள் விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. சில இயற்கை பொருட்களை வைத்து பாத்ரூமில் நறுமண வீசும் செய்யலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா இயற்கையாகவே நாற்றத்தை உறிஞ்சும். எனவே பேக்கிங் சோடாவுடன் லாவண்டர் அல்லது யூகலிப்டஸ் போன்ற அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை சேர்த்து பாத்ரூமில் தெளிக்கவும். இந்த கலவையிலிருந்து வரும் வாசனை தனித்துவமானது என்பதால் அவை உங்களது பாத்ரூமை புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வைத்திருக்கும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை சமையலுக்கு மட்டுமல்ல பாத்ரூமில் அடிக்கும் நாற்றத்தைப் போக்கவும் உதவுகிறது. இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதை ஒரு கிண்ணத்தில் வைத்து அதனுடன் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து அந்தக் கிண்ணத்தை பாத்ரூமில் ஜன்னல்கள் அருகில் வைத்தால் அவை நறுமணத்தை வெளியிடும் மற்றும் பாத்ரூமில் அடிக்கும் நாற்றங்களை நீக்கும்.
நறுமண சோப்புகள்
பாத்ரூமில் எப்போதும் வாசனை வீசும் சோப்புகளே வைத்தால் இனிமையான வாசனையை கொடுக்கும். இதுவரை உங்களது பாத்ரூமில் நறுமணமிக்க சோப்புகளை வைக்கவில்லை என்றால், இன்றிலிருந்து வையுங்கள். பாத்ரூம் முழுவதும் இனிமையான வாசனை பரவும்.
வாசனை எண்ணெய்கள்
வாசனை எண்ணெய்கள் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. எனவே பாத்ரூமில் அடிக்கும் நாற்றத்தைப் போக்க அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தலாம். இதற்கு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் உருண்டையில் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெயை ஊற்றி அதை டாய்லெட் ரோலிங் பின்னால் வைத்தால் போதும். இனி நாத்தமே அடிக்காது. நல்ல வாசனையை மட்டுமே கொடுக்கும்.
பூச்செடிகள்
சில உட்புற தாவரங்கள் அலங்காரத்திற்கு மட்டுமல்ல காற்றின் தரத்தை மேம்படுத்தி நறுமணங்களை வெளியிடும். எனவே லில்லி, பாம்பு செடி போன்ற உட்புற தாவரங்களை பாத்ரூமில் வைக்கலாம். அவை தனித்துவமான வாசனையை தரும்.
காற்றோட்டமாக வைக்கவும்
பாத்ரூம் ஜன்னல் கதவை எப்போதுமே மூடி வைத்தால் கெட்ட துர்நாற்றம் மேலும் மேலும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் கிருமிகளும் அதிகமாகும். எனவே பாத்ரூம் ஜன்னல் கதவை தினமும் 15 நிமிடங்களாவது திறந்து வையுங்கள். இதனால் காற்றோட்டமாகவும் இருக்கும் வைரஸ் பாக்டீரியாக்கள் எண்ணிக்கையும் குறையும்.