- Home
- Lifestyle
- Bathroom Smells : ஒரு எலுமிச்சையும், உப்பும் போதும்! பாத்ரூம்ல துர்நாற்றமே வராது.. உடனடி க்ளீன்
Bathroom Smells : ஒரு எலுமிச்சையும், உப்பும் போதும்! பாத்ரூம்ல துர்நாற்றமே வராது.. உடனடி க்ளீன்
பாத்ரூமில் வீசும் துர்நாற்றத்தை போக்க சில சிம்பிள் டிப்ஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Tips For Bathroom Smell Removing
நம்ம வீடு எப்பவுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். அதுவும் குறிப்பாக குளியலறை. ஏனெனில் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை குளியலறை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம். இதனால் அங்கு ஒரு விதமான ஸ்மெல் வரும். சில சமயங்களில் துர்நாற்றம் கூட வீசும். இந்த பிரச்சனைக்கு ஒரு சூப்பரான சில தீர்வுகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
குளியலறையில் துர்நாற்றம் வீசுவது ஏன்?
குளியலறை எப்பவுமே உயரமாக இருப்பதால் அங்கு பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் சீக்கிரமாகவே வளர்ந்து விடும். இவைதான் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணம். குளியலறை மட்டுமல்ல வாஷ்பேஷன், கழிப்பறை போன்ற இடங்களை கூட ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால், அங்கிருந்தும் துர்நாற்றம் வீசும். அவை கொஞ்ச நேரம் தான் வாசனையாக இருக்கும். பிறகு அது துர்நாற்றம் தான் மறுபடியும் வீச ஆரம்பிக்கும்.
1. பேக்கிங் சோடா மற்றும் வினிகர்
குளியலறை சுத்தம் செய்வதற்கு இவை இரண்டும் சிறந்த வழி. இதற்கு பேக்கிங் சோடாவை குளியலறையில் தூவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு வினிகரை தெளித்து நன்றாக தேய்த்து நன்றாக சுத்தம் செய்யுங்கள். துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்கியங்கள் எல்லாம் அழிந்து போய்விடும். வாசனையும் வீசும்.
2. உப்பு மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை இரண்டாக விட்டு அதில் கொஞ்சம் உப்பு தூக்கி குளியலறையில் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவை துர்நாற்றத்தை உறிஞ்சி ஒரு நல்ல வாசனையை வெளியிடும். மற்றொரு வழி என்னவென்றால், எலுமிச்சை பழதோலை குப்பையில் போடாமல் அதை குளியலறையில் வைத்தால், அதுவும் ஒரு நல்ல வாசனையை குளியலறையில் பரப்பும்.
3. அத்தியாவசிய எண்ணெய்
குளியலறைக்கு இது ஒரு ஸ்பிரே மாதிரி என்று சொல்லலாம். யூகலிப்டஸ், லெமன் கிராஸ், லாவண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு காட்டன் பஞ்சில் எண்ணிக்கை நினைத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து குளிரையில் மூளையில் வைத்து விடுங்கள். குளியலறை முழுவதும் நல்ல வாசனை வீசும். இல்லையெனில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த எண்ணெயை கலந்து குளியலறை முழுவதும் தெளித்தால் நல்ல வாசனை பரவும்.
4. காற்றோட்ட வசதி
குளியலறை துர்நாற்றம் வீசக்கூடாது என்றால், அங்கு எப்போதுமே காற்று வர மாதிரி இருக்க வேண்டும். இதற்கு குளியலறையில் ஒரு ஜன்னல் வைக்கலாம், ஜன்னலை திறந்து வைக்கலாம். இல்லையெனில் ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் கூட வைக்கலாம். இது ஈரப்பதத்தை உறிஞ்சி துர்நாற்றத்தை வெளியேற்றும்.
மேலே சொல்லப்பட்டுள்ள டிப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களது குளியலறை எப்போதுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்.