- Home
- Lifestyle
- Tough Stains : ஒரு லெமன் போதும்!! துணியில் உள்ள விடாப்பிடியான கறையை நொடியில் நீக்கும் ஈஸியான டிப்ஸ்
Tough Stains : ஒரு லெமன் போதும்!! துணியில் உள்ள விடாப்பிடியான கறையை நொடியில் நீக்கும் ஈஸியான டிப்ஸ்
துணிகளில் ஒட்டியிருக்கும் விடாப்படியான கறைகளை சுலபமாக அகற்ற ஈஸியான டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Best Stain Removal Methods
உங்களுக்கு பிடித்த ட்ரெஸ்ஸில் விடாப்பிடியான கறை ஒட்டியிருக்கிறதா? எவ்வளவு துவைத்தும் கறையை அகற்ற முடியலையா? கவலையை விடுங்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். ஆடையில் படிந்திருக்கும் கிரீஸ் கறை, டீ கறை, எண்ணெய் பிசுக்கு போன்ற விடாப்பிடியான கரைகளில் சுலபமாக அகற்றி விடலாம். அது குறித்து இப்போது பதிவில் பார்க்கலாம்.
லெமன் மற்றும் வினிகர் :
ஆடையில் படிந்திருக்கும் பிடிவாதமான கறையை அகற்ற எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டில் இருக்கும் அமில பண்புகள் விடப்படியான கரையை உடைக்க உதவுகின்றன. இதற்கு எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சம அளவு எடுத்து கறை மீது தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, பிறகு தண்ணீரில் கழுவினால் போதும் கறை முற்றிலும் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா :
ஆடைகள் படிந்திருக்கும் கடினமான மஞ்சள் கறையை அகற்ற துணி துவைக்கும் திரவத்துடன் சிறிதளவு சோடாவை சேர்த்து அந்த கலவையை கறை மீது நேரடியாக தடவி 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து விட்டு பிறகு எப்போதும் போல துவைக்க வேண்டும்.
டூத் பேஸ்ட் :
டூத் பேஸ்ட் பற்களை சுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல ஆடையில் படிந்திருக்கும் கடினமான கறையை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. இதற்கு ஆடையில் இருக்கும் கறையின் மீது டூத் பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு துவைக்க வேண்டும்.
ஹைட்ரஜன் பேராக்ஸைடு :
இது மருந்தகங்களில் எளிதாக கிடைக்கும். இந்த திரவத்தை கடினமான கறை மீது தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு துணியை எப்போதும் போல துவைத்தால் போதும். கரை நீங்கிவிடும். ஆனால் இதை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனம் உடனும் இருக்க வேண்டும்.
அல்கஹால் :
ஆடை மீது படிந்து இருக்கு விடப்படியான கரையை அகற்ற ஆல்கஹால் சிறந்த மற்றும் எளிய தீர்வாகும். இதற்கு ஒரு காட்டன் துணியை அல்கஹாலில் நனைத்து, கறை மீது மெதுவாக தடவி வந்தால் கறை உடைந்துவிடும்.