- Home
- Lifestyle
- Gas Stove Cleaning Tips : ஒரு எலுமிச்சை போதும்! கேஸ் அடுப்பை புதிது போல மாற்றிவிடும் ; ஒரு அழுக்கு இருக்காது
Gas Stove Cleaning Tips : ஒரு எலுமிச்சை போதும்! கேஸ் அடுப்பை புதிது போல மாற்றிவிடும் ; ஒரு அழுக்கு இருக்காது
அழுக்காக இருக்கும் கேஸ் அடுப்பை புதியது போல மாற்ற அதை சுத்தம் செய்வதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்கள் இங்கே.

Gas Stove Cleaning Tips
கேஸ் அடுப்பு தற்போது எல்லோருடைய வீடுகளிலும் உள்ளன. இதை சமையலுக்கு தினமும் பயன்படுத்துவதால் எண்ணெய், கிரீஸ் போன்ற விடாப்பிடியான கறைகள் அதில் படித்திருக்கும். அவற்றை அகற்றுவதற்கு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்தி கேஸ் அடுப்பை மீண்டும் புதியது போல மாற்றலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை மற்றும் உப்பு :
கேஸ் அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கிரீஸை அகற்ற சிரமமாக இருந்தால் எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தலாம் இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு துண்டின் மீது சிறிதளவு உப்பை தூவி அதைக்கொண்டு கேஸ் அடுப்பில் இருக்கும் கிரீஸ் பகுதிகளை அழுத்தி தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அசிட்டிக் அமிலமும், உப்பின் சிராய்ப்பு பண்பும் விடாப்பிடியான கிரீஸ் முற்றிலுமாக நீக்கிவிடும். பிறகு ஈரமான துணியைக் கொண்டு கேஸ் அடுப்பை சுத்தம் செய்து பார்த்தால் பளபளக்கும்.
வினிகரும் பேக்கிங் சோடாவும்...
கேஸ் அடுப்பை சுத்தம் செய்வதற்கு வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு முதலில் கேஸ் ரெகுலேட்டரை அணைக்கவும். பிறகு அதிலிருந்து பர்னர்களை அகற்றி விடுங்கள். இப்போது அடுப்பின் மேற்பரப்பில் பேக்கிங் சோடாவை தூவவும். பின் சிறிதளவு வெள்ளை வினிகரையும் சேர்க்கவும். இந்த இரண்டு கலவையானது அடுப்பில் இருக்கும் விடாப்படியான கிரீஸ் மற்றும் எண்ணெய் கறைகளை மென்மையாக்கி விடும். 10 நிமிடங்கள் கழித்து பல் துலக்கும் பிரஷ் கொண்டு அடுப்பை மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு ஈரமான துணியால் துடைக்கவும். இப்போது பார்த்தால் கேஸ் அடுப்பு புதுசு போல இருக்கும்.
சூடான தண்ணீரும், பாத்திரம் கழுவும் லிக்விடும்...
கேஸ் அடுப்பில் இருக்கும் தட்டுகள், பர்னர்கள் சுத்தம் செய்வதற்கு பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சூடான நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை ஊற்றி அதில் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் தட்டுக்கள் மற்றும் பர்னர்களை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி அதில் படிந்திருக்கும் அழுக்குகளை கழுவவும்.
அடுப்பு பளபளக்க...
கேஸ் அடுப்பை சுத்தம் செய்த பின் அடுப்பின் மீது சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி ஒரு உலர்ந்த துணியை பயன்படுத்தி மெதுவாக துடைக்க வேண்டும். இப்படி செய்தால் கேஸ் அடுப்பு புதியது போல பளபளக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

