கேஸ் அடுப்பை கிச்சன்ல இந்த திசையில் வைத்தால் பண பிரச்சனைகள் நீங்கும்!! நிதி பெருகும்!!
நிதி பிரச்சனைகள் நீங்கி பணம் பெருக கேஸ் அடுப்பை சமையலறையின் எந்த பக்கத்தில் வைக்கவேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி , சமையலறை என்பது எந்த வீட்டிலும் மிக முக்கியமான இடம். பசியாற்றும் இடமும் கூட. வாஸ்து படி, சமையலறை கட்டும் போது சில விதிகளை பின்பற்றவேண்டும். இந்து நம்பிக்கைகளின்படி, அன்னை அன்னபூர்ணா சமையலறையில் தான் வசிக்கிறார். ஆகவே இங்குள்ள வாஸ்து தொடர்பான தவறுகள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சமையலறையில் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகளை பின்பற்றுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. சமையலறை தொடர்பான வாஸ்து விதிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
எந்த திசையில் சமையலறை கட்ட வேண்டும்?
தென்கிழக்கு மண்டலத்தில் சமையலறை கட்ட வேண்டும். கிழக்கு திசையில் கேஸ் அடுப்பை வைக்க வேண்டும். சமைப்பவர் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என்பது நம்பிக்கை.
குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் போன்றவற்றை சமையலறையின் வடகிழக்கு மண்டலத்தில் வைக்க வேண்டும். சமையலறை தொட்டியின் இடம் சமையலறையின் வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் செய்யப்பட வேண்டும்.
சமையலறையில் உள்ள மின்சாதனங்களை தெற்கு/தென்மேற்கு பகுதியில் வைக்கலாம். நீரும் நெருப்பும் (தீ) ஒரே வரியில் வைக்கக் கூடாது. சமையலறையில் நெருப்பும் தண்ணீரும் ஒரே வரிசையில் இருந்தால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சிறு சிறு விஷயங்களில் சச்சரவுகள் வரலாம்.
இதையும் படிங்க: வீட்டில் பணம் குவிய! வாஸ்துப்படி இந்த திசையில் சிவனின் போட்டோவை வைங்க போதும்!!
நெருப்பும், தண்ணீரும் ஒரே கோட்டில் இருந்தால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதை சரிசெய்ய முடியாவிட்டால், அவற்றுக்கிடையே ஒரு சிவப்பு கோட்டை உருவாக்கலாம். இல்லையெனில், ஒரு பச்சை செடியை அவற்றின் நடுவில் வைக்கலாம்.
சமையலறையில் கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டின் தென்கிழக்கு மூலை சமையலறைக்கு ஏற்ற இடம். இந்த திசையில் கட்டப்பட்ட சமையலறை மங்களகரமானதாக நம்பப்படுகிறது. இந்த வாஸ்து விதிகளை பின்பற்றினால் வீட்டில் பணம் பெருகும்.
இதையும் படிங்க: சனிக்கிழமை அன்று அசோக மரத்துக்கு விளக்கு ஏற்றி வழிப்பட்டால்.. மும்மூர்த்திகள் என்ன தருவார்கள் தெரியுமா?