- Home
- Lifestyle
- Winter Fermentation Tips : இந்த சீசன்ல 'இட்லி' மாவு புளிக்க நேரமாகுதா? வெறும் '1' மணிநேரத்தில் புளிக்க சூப்பர் டிப்ஸ்
Winter Fermentation Tips : இந்த சீசன்ல 'இட்லி' மாவு புளிக்க நேரமாகுதா? வெறும் '1' மணிநேரத்தில் புளிக்க சூப்பர் டிப்ஸ்
குளிர்காலத்தில் இட்லி மாவை சீக்கிரமாக புளிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

Winter Fermentation Tips For Idli Dosa
தென்னிந்தியர்கள் அனைவரும் இட்லி, தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே, இதற்கு அடிக்கடி மாவு அரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெப்பமான சூழ்நிலையில் மாவு சீக்கிரமாக புளித்து விடும். அதே சமயம் குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. சற்று அதிக நேரம் எடுக்கும். மேலும் இட்லி மாவு நன்குப் புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். எனவே, சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இட்லி மாவை ஒரு மணி நேரத்திற்குள் குளித்து வைத்து விடலாம். இந்த பதிவில் அது குறித்து பார்க்கலாம்.
மாவு அரைக்கும் முறை :
அரிசியை 8 மணி நேரமும் உளுந்து 2 மணி நேரமும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைப்பார்கள். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் செய்து கொள்ளலாம். இப்போது ஊற வைத்த உளுந்தை அறிந்த பிறகு அரிசியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மாவை எளிதில் புளிக்க வைக்க டிப்ஸ்கள் :
- மாவை கைகளால் கலக்கும் போது மாவு மிக எளிதாக புளிக்கும். ஏனெனில் நம் கைகளில் உள்ள சூடு மாவில் பரவி மாவினை எளிதில் குளிக்க வைத்து விடும்.
- கிரைண்டரில் அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும். இப்படி செய்தால் மாவு சீக்கிரமாக புளிக்கும்.
- குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு பதிலாக வெப்பமான இடங்களில் மாவு பாத்திரத்தை வைத்தால் மாவு சீக்கிரமாக புளிப்பதற்கு உதவும்.
- மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தினால் சீக்கிரமாக குளிப்பதற்கு உதவும். ஆனால் உப்பு சேர்க்க வேண்டாம்.
- மஉங்களுக்கு விருப்பம் இருந்தால் மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். இது குளிர்காலத்தில் மாவு சீக்கிரம் குளிப்பதற்கு உதவும்.
அதிக புளித்த மாவை என்ன செய்வது?
சில சமயங்களில் மாவு அதிகமாக புளித்து விட்டால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது. எனவே புளித்த மாவில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து அதில் இட்லி அல்லது இட்லி சுட்டு சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அரைத்த மாவை பாதுகாக்கும் முறை :
அரைத்த மாவை காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் அடிக்கடி மாவு அரைக்க வேண்டிய அவசியம் வராது. பிரிட்ஜில் எடுத்த மாவை பயன்படுத்தி பிறகு உடனே மீண்டும் பிரிட்ஜில் வைக்கவும். நீண்ட நேரம் வெளியில் இருந்தால் மாவு எளிதில் கெட்டு போய்விடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

