MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்

முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க யூடியூப், டேட்டா என்ட்ரி போன்ற பழைய வழிகளை விடுத்து, தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப முதலீடே இல்லாமல் மொபைல் மற்றும் லேப்டாப் மூலம் நிஜமாகவே நல்ல வருமானம் ஈட்டக்கூடிய 5 முற்றிலும் புதிய, சுவாரசியமான ஐடியாக்கள் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : May 23 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உங்க குரலுக்கு விலை பேசலாம்:
Image Credit : Getty

உங்க குரலுக்கு விலை பேசலாம்:

இப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் விளம்பரங்களுக்கு "வாய்ஸ் ஓவர்" கொடுக்க ஏகப்பட்ட டிமாண்ட். பெரிய மைக் எல்லாம் தேவையில்லை, நல்ல ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். 'Fiverr' அல்லது 'Upwork' தளங்களில் உங்களது வாய்ஸ் சாம்பிள்களை பதிவேற்றி, வீட்டில் இருந்தே டப்பிங் பேசி லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஆன்லைன் பத்திரிக்கை டிசைனிங்:
Image Credit : Getty

ஆன்லைன் பத்திரிக்கை டிசைனிங்:

இப்போது யாரும் நேரில் போய் பத்திரிக்கை வைப்பதில்லை, வாட்ஸ்அப் வீடியோ தான் ட்ரெண்ட். 'Canva' போன்ற இலவச ஆப்களில் 5 நிமிடத்தில் அட்டகாசமான திருமண/பிறந்தநாள் டிஜிட்டல் இன்விடேஷன்களை உருவாக்கலாம். உள்ளூர் வாடிக்கையாளர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே ஆர்டர்களை அள்ளலாம்.

Related Articles

Related image1
success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்
Related image2
office tips ஆபீஸில் கண்டிப்பாக மற்றவர்களிடம் பகிரக் கூடாத 'டாப் 6' ரகசியங்கள்
35
சொந்தமாக டி-ஷர்ட் பிராண்ட் ஆரம்பிங்க:
Image Credit : Getty

சொந்தமாக டி-ஷர்ட் பிராண்ட் ஆரம்பிங்க:

உங்களிடம் டி-ஷர்ட் ஸ்டாக் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. கூலான தமிழ் கவிதைகள் அல்லது மீம்ஸ் வசனங்களை டிசைன் செய்து, 'Teeshopper' அல்லது 'Printrove' போன்ற தளங்களில் அப்லோட் செய்தால் போதும். ஆர்டர் வந்தால் அவர்களே பிரிண்ட் செய்து டெலிவரி செய்து விடுவார்கள். உங்களுக்கு கமிஷன் பணம் வீடு தேடி வரும்!

45
பெரிய புள்ளிகளுக்கு பின்னால் 'நீங்க':
Image Credit : Getty

பெரிய புள்ளிகளுக்கு பின்னால் 'நீங்க':

லிங்க்டின் (LinkedIn) மற்றும் எக்ஸ் (X) தளங்களில் இருக்கும் பிசினஸ் பிரபலங்களுக்கு தினமும் போஸ்ட் எழுத நேரமிருக்காது. அவர்களுக்காக பேக்-எண்டில் கன்டென்ட் எழுதிக் கொடுக்கும் வேலை தான் இது. நல்ல தமிழ் அல்லது ஆங்கிலத் திறமை இருந்தால், ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 பிரபலங்களை பிடித்தாலே கைநிறைய சம்பாதிக்கலாம்.

55
ஆன்லைன் மீட்டிங் மேனேஜர்:
Image Credit : Getty

ஆன்லைன் மீட்டிங் மேனேஜர்:

வெபினார்கள் (Webinars), ஆன்லைன் வகுப்புகள், ஜூம் (Zoom) மீட்டிங்குகளை ஒருங்கிணைப்பது தான் இந்த வேலை. மீட்டிங் லிங்க் அனுப்புவது, வருபவர்களை அட்மிட் செய்வது, டெக்னிக்கல் கோளாறுகளை சரிசெய்வது என எல்லாவற்றையும் வீட்டில் இருந்தே செய்யலாம். வார இறுதி நாட்களில் மட்டும் வேலை செய்து பாக்கெட் மணியை நிரப்பலாம்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பணம்
தொழில்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image2
வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!
Recommended image3
Snake: உங்கள் கனவில் பாம்பு வருதா..? துரோகத்தின் அறிகுறியா..? மரணத்தின் எச்சரிக்கையா..?
Related Stories
Recommended image1
success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்
Recommended image2
office tips ஆபீஸில் கண்டிப்பாக மற்றவர்களிடம் பகிரக் கூடாத 'டாப் 6' ரகசியங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved