MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Lifestyle
  • success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்

success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்

வெற்றி என்பது ஒரு இலக்கு அல்ல, அது ஒரு பயணம். சராசரி வாழ்க்கையைச் சிறப்பாக்கி உங்களை வெற்றியாளராக மாற்றும் 7 முக்கிய வாழ்க்கை பாடங்கள் இதோ. தினசரி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமானதாக மாற்ற இவை உதவும்.

1 Min read
Author : Priya Velan
Published : May 11 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
"நோ" சொல்லுங்க
Image Credit : Getty

"நோ" சொல்லுங்க

வெற்றியாளர்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்பவர்கள் அல்ல. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள். உங்கள் இலக்கிற்குத் தடையாக இருக்கும் விஷயங்களுக்கு தைரியமாக "நோ" சொல்லுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துவதே வெற்றிக்கான முதல் படி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
1% முன்னேற்றம் போதும்
Image Credit : Getty

1% முன்னேற்றம் போதும்

ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட முடியாது. நேற்று இருந்ததை விட இன்று 1% சிறப்பாகச் செயல்படுங்கள். இந்தச் சிறிய மாற்றம் ஒரு வருடத்தில் உங்களை மிகப்பெரிய உயரத்தில் கொண்டு போய் நிறுத்தும். வேகம் முக்கியமல்ல, தொடர்ச்சிதான் முக்கியம்.

Related Articles

Related image1
ஆபீஸ் மீட்டிங்கில் தடுமாறாமல் கெத்தாக பேச 5 ஸ்மார்ட் ஐடியாஸ்
Related image2
ஆபீஸ் போகும் பெண்களே...2 நிமிடத்தில் ரெடியாக சூப்பர் ஹேர்ஸ்டைல் டிப்ஸ்
37
தோல்வியைத் தோழனாக்குங்கள்
Image Credit : Getty

தோல்வியைத் தோழனாக்குங்கள்

தோல்வி என்பது ஒரு முடிவு அல்ல, அது ஒரு பாடம். தவறு செய்யும் போது வருத்தப்படாதீர்கள், "இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்?" என்று கேளுங்கள். ஒவ்வொரு தோல்வியும் உங்கள் அடுத்த வெற்றிக்கான மிகச்சிறந்த அனுபவத்தை உங்களுக்கு இலவசமாகத் தருகிறது.

47
கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்
Image Credit : Getty

கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் அனைவரும் சிறந்த கேட்பாளர்கள். அதிகம் பேசுவதை விட, மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கும் போது உங்களுக்குப் புதிய யோசனைகள் கிடைக்கும். அறிவு தேடலில் காதுகளுக்கு அதிக வேலை கொடுங்கள், வாய்க்கு அல்ல!

57
உங்கள் சூழலைச் சரிசெய்யுங்கள்
Image Credit : Getty

உங்கள் சூழலைச் சரிசெய்யுங்கள்

"உங்களைச் சுற்றியுள்ள ஐந்து நபர்களின் சராசரிதான் நீங்கள்." உங்களை ஊக்கப்படுத்தும், உங்களை விடத் திறமையான நபர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருப்பதே உங்கள் மன அமைதிக்கும் வெற்றிக்கும் நல்லது.

67
'இப்போதே செய்' மந்திரம்
Image Credit : Getty

'இப்போதே செய்' மந்திரம்

நாளைய தினம் யாருக்கும் நிச்சயம் இல்லை. "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்ற எண்ணமே வெற்றியைத் தள்ளிப் போடும் முதல் எதிரி. கடினமான வேலையை முதலில் செய்து முடியுங்கள். அந்த ஒரு செயல் உங்கள் நாள் முழுவதும் தன்னம்பிக்கையைத் தரும்.

77
ஆரோக்கியமே அஸ்திவாரம்
Image Credit : Getty

ஆரோக்கியமே அஸ்திவாரம்

என்னதான் சாதித்தாலும், அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் தேவை. தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் ஆழ்ந்த உறக்கம் உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். உங்கள் உடலைக் கவனித்துக் கொண்டால், அது உங்கள் கனவுகளைக் கவனித்துக் கொள்ளும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வெற்றிக் கதைகள்
தலைமைத்துவம்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Behavior: எலிகள் ஏன் எல்லாப் பொருட்களையும் கடிச்சு வைக்குது? உண்மையான காரணம் இதுதான்!
Recommended image2
Iron Box: தினமும் அயர்ன் பாக்ஸ் யூஸ் பண்ணுவீங்களா? கரண்ட் பில் எகிறாம இருக்க இதை செய்யுங்க!
Recommended image3
Chanakya Niti: இந்த 4 இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஆபீஸ் மீட்டிங்கில் தடுமாறாமல் கெத்தாக பேச 5 ஸ்மார்ட் ஐடியாஸ்
Recommended image2
ஆபீஸ் போகும் பெண்களே...2 நிமிடத்தில் ரெடியாக சூப்பர் ஹேர்ஸ்டைல் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved