ஆபீஸ் மீட்டிங்கில் தடுமாறாமல் கெத்தாக பேச 5 ஸ்மார்ட் ஐடியாஸ்
அலுவலக மீட்டிங் என்றாலே பலருக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் வரும். "யாராவது கேள்வி கேட்டுவிடுவார்களோ?", "நாம் பேசுவது தவறாக இருக்குமோ?" என்ற பயம் உங்கள் திறமையை முடக்கிவிடலாம்.எந்த ஒரு மீட்டிங்கிலும் தன்னம்பிக்கையோடு 'கெத்தாக' பேச, இதோ 5 ரகசிய வழிகள்.

"முதல் 5 நிமிட" வியூகம்
மீட்டிங் தொடங்கிய முதல் 5 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு கருத்தைச் சொல்லிவிடுங்கள். அது ஒரு சிறு வரவேற்பாகவோ அல்லது ஒரு சந்தேகமாகவோ கூட இருக்கலாம். ஆரம்பத்திலேயே உங்கள் குரலை நீங்கள் கேட்டுவிட்டால், மீட்டிங் முடியும் வரை உங்கள் பயம் காணாமல் போய்விடும். அமைதியாக இருக்க இருக்க பயம் அதிகமாகும்.
கேள்வியே உங்கள் கேடயம்
உங்களுக்குப் பேசக் கருத்து இல்லை என்றால், ஒரு புத்திசாலித்தனமான கேள்வியைக் கேளுங்கள். "இந்த ஐடியா நன்றாக இருக்கிறது, இதைச் செயல்படுத்தினால் பட்ஜெட் எப்படி இருக்கும்?" என ஒரு கேள்வியை வீசுங்கள். நீங்கள் பேசுகிறீர்கள் என்ற பிம்பத்தை இது உருவாக்கும், அதே சமயம் தவறாகப் பேசிவிடுவோமோ என்ற பயமும் இருக்காது.
"பாடி லாங்குவேஜ்" மேஜிக்
பேசத் தொடங்கும் முன் உங்கள் முதுகை நேராக வைத்து, கைகளை மேஜையின் மேல் வையுங்கள். குறுகி உட்காராமல் நிமிர்ந்து உட்கார்ந்தாலே மூளைக்கு "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்ற சிக்னல் செல்லும். உங்கள் உடல் மொழி மாறினால், உங்கள் குரலில் தானாகவே உறுதி பிறக்கும்.
தெரிந்தவற்றில் தொடங்குங்கள்
முழு விஷயத்தையும் விளக்கத் தெரியவில்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த ஒரு சிறிய புள்ளி விவரத்தையோ அல்லது ஒரு தகவலையோ மட்டும் சொல்லுங்கள். "நமக்குத் தெரிந்த வரை கடந்த வாரம்..." எனத் தொடங்கினால் உங்கள் மூளை பதற்றமடையாது. தெரிந்த விஷயத்தைப் பேசும் போது பயம் எட்டிப் பார்க்காது.
மௌனத்தைப் பயன்படுத்தத் பழகுங்கள்
வேகமாகப் பேசி முடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். பேசும் போது இடையில் ஒரு வினாடி நிறுத்திப் பேசுங்கள். இது நீங்கள் பதற்றத்தில் இல்லை என்பதைக் காட்டும். மௌனம் உங்களை ஒரு முதிர்ச்சியான பேச்சாளராக மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

