Tamil

தினமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்றீங்களா? இவ்ளோ ஆபத்துகளா..?

ஸ்ட்ரெயிட்டான முடி வேணும்னு நிறைய பேருக்கு ஆசை இருக்கும். இதுக்காக தினமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், டிரையர்லாம் யூஸ் பண்ணுவாங்க. ஆனா, இது முடியோட ஆரோக்கியத்துக்கு நல்லதே இல்லை.

Tamil

ஈரப்பதம் காணாம போயிடும்

தினமும் முடியில ஹீட் (Heat) பயன்படுத்துறதால, முடியோட இயற்கையான ஈரப்பதம் குறைஞ்சிடும். இதனால, முடி ரொம்ப வறண்டு (Dry Hair), அதோட மென்மையை இழந்துடும்.

Image credits: pinterest
Tamil

பலவீனமாகும் முடியின் வேர்கள்

தொடர்ந்து ஹீட்டிங் கருவிகளைப் பயன்படுத்தினா, முடியோட வேர்க்கால்கள் பலவீனமாகிடும். இதனால, முடி உதிர்வு (Hair Fall) பிரச்னை அதிகமாகி, பெரிய தொல்லையா மாறலாம்.

Image credits: pinterest
Tamil

முடி வெடிப்புப் பிரச்னை

அதிகப்படியான சூடு காரணமா, முடியோட நுனிகள் வெடிக்க ஆரம்பிக்கும். இதனால முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பார்க்கவும் ஜீவன் இல்லாம, கலைஞ்ச மாதிரி தெரியும்.

Image credits: Pexels
Tamil

தலையில் அரிப்பு, எரிச்சல்

ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்ணும்போது, தலையோட சருமமும் சூடாகும். இதனால, தலையில வறட்சி அதிகமாகி, அரிப்பு, பொடுகு தொல்லை வரலாம்.  இது அதிகமாகி டாக்டர்கிட்ட போக வேண்டிய நிலை கூட வரலாம்.

Image credits: Pexels
Tamil

ஹேர் கலர் மங்கிவிடும்

நீங்க உங்க முடிக்கு கலர் பண்ணியிருந்தா, ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்றதால அந்த கலர் சீக்கிரமே மங்கிப்போயிடும். அதுமட்டுமில்லாம, முடியோட இயற்கையான நிறத்துக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

Image credits: Pexels
Tamil

இதுக்கு என்னதான் தீர்வு?

கட்டாயமா பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தா, நல்ல தரமான 'ஹீட் புரொடெக்டன்ட்'  சீரம் அல்லது ஸ்ப்ரே பயன்படுத்துங்க. அப்புறம்,  தினமும் முடிக்கு எண்ணெய் வெச்சு நல்லா பராமரிக்கணும்.

Image credits: Pexels

Coriander: மண் இல்லாம, பிளாஸ்டிக் பாட்டில்ல கொத்தமல்லி வளர்க்கலாம்! எப்படினு தெரிஞ்சுக்கோங்க

உதடு கருமை நீங்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை குறிப்புகள் இதோ

Gold Ring Designs: தினசரி அணிய 1 கிராமில் தங்க மோதிர டிசைன்ஸ்.!

வயிறு ஆரோக்கியமாக இருக்க இந்த 6 பழங்கள் போதும்.!