பிபி கட்டுக்குள் வருவதற்கு எத்தனை நிமிஷம் 'வாக்கிங்' போகனும் தெரியுமா?
Morning Walk and Blood Pressure : உயர் இரத்த அழுத்தத்தை நடப்பயிற்சி செய்வதன் மூலம் சுலபமாக கட்டுப்படுத்தலாம் தெரியுமா? அது எப்படி என்று எங்கு பார்க்கலாம்.

Morning walk benefits in tamil
தற்போது உலகளவில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை உயரத்த அழுத்தம். வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை ஆகும்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பலருக்கும் தங்களுக்கு உயர்த்தம் இருப்பது கூட தெரிவதில்லை. மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உயரத்த அழுத்தம் தான்.
Benefits of morning walk for blood pressure in tamil
இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் இதையும் தவிர, தினமும் காலை நடைபயிற்சி செய்வதன் மூலமும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் தெரியுமா? எனவே, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நடைபயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: வாக்கிங்கை விட 10 நிமிஷம் ஸ்பாட் ஜாகிங்ல நிறைய நன்மைகள்.. உண்மையில் எது பெஸ்ட்?
How morning walk lowers blood pressure in tamil
பிபி கட்டுப்படுத்த வாக்கிங்:
நிபுணர்களின் கூற்றுப்படி, பிபி-யை கட்டுப்படுத்த விறுவிறுப்பான நடைபயிற்சி செய்வது நல்லது என்று சொல்கிறார்கள். மேலும் நீங்கள் எளிதாகவும் உங்களது வசதிக்கு ஏற்ற வகையிலும் நடையை வேகப்படுத்தலாம். ஆனால் அதிகபட்ச பலன்களைப் பெற விரும்பினால் நீங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும். இது தவிர பிற வகை ஏரோபிக் பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: காலையா, மாலையா? சீக்கிரம் எடையை குறைக்க எப்போது வாக்கிங் போகலாம்?
Blood Pressure reduce tips in tamil
பிபியை கட்டுப்படுத்த எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்:
நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஒவ்வொரு 7 நாட்களுக்கும் 150 நிமிடங்களுக்கு விறுவிறுப்பான நடை பயிற்சி செய்வது போதுமானது. குறிப்பாக ஐந்து நாட்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இதையும் தவிர முயற்சிகள் போன்ற சில லேசான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
உங்களால் வெளியில் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், தினமும் வீட்டில் படிக்கத்தில் ஏறு இறங்கினால் மட்டும் போதும், உயரத்தை அழுத்தம் தானாகவே குறையும். இப்படி செய்வதன் மூலம் உங்களது உடலில் வெப்பத்தின் விகிதம் அதிகரிக்கும் மற்றும் வேகமாக சுவாசிக்கவும் உதவும்.
Morning Walk and Blood Pressure in tamil
பிபி குறைக்க வாக்கிங் செல்லும்போது இவற்றை நினைவில் கொள்:
- நீங்கள் வாக்கிங் வெளியில் செல்லும்போது உடனே செல்லாமல் முதலில் வார்ம்-அப் செய்ய வேண்டும். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதுபோல நேராக பார்த்து நடக்க வேண்டும். நடக்கும்போது ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வேகத்தை பராமரிக்கும்.
- வாக்கிங் செல்லும்போது அதற்கு ஏற்ற காலணிகள் தான் அணிய வேண்டும். ஏனெனில், சரியான காலணிகள் காயங்கள் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. இது தவிர, வசதியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.
- நீங்கள் வாக்கிங் செல்லும் முன் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் உடலில் நீரிழப்பு ஏற்பட்ட ரத்த அழுத்தத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிடும். எனவே வாக்கிங் செல்வதற்கு முன் கண்டிப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இதையும் தவிர, நீங்கள் வாக்கிங் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இடையில் தண்ணீர் தேவைப்படும் போது குடிக்கவும்.