MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காலையா, மாலையா? சீக்கிரம் எடையை குறைக்க எப்போது  வாக்கிங் போகலாம்? 

காலையா, மாலையா? சீக்கிரம் எடையை குறைக்க எப்போது  வாக்கிங் போகலாம்? 

Best Time To Walk For Weight Loss :  காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்த பதிவில் தெளிவாக காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 10 2024, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking for weight loss tips in tamil

Walking for weight loss tips in tamil

எடை குறைப்புக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். சாதாரணமாக ஒரு நபர் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒரு நாளைக்கு நடப்பது அவருக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலை அல்லது மாலை எந்த வேளையில் நடைபயிற்சி செய்தாலும் அது உங்களுக்கு பலன்களை தரும். ஆனால் எந்த நேரத்தில் நடப்பது கொழுப்பைக் குறைத்து உடல் எடையை விரைவில்   உதவுகிறது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க:  பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Morning walks for weight loss in tamil

Morning walks for weight loss in tamil

காலையில் வாக்கிங்:  

காலையில் வாக்கிங் செல்வது அந்த நாளை உற்சாகமாக தொடங்க உதவுகிறது. காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாக நடை பயிற்சி செல்ல வேண்டும். இது நாள் முழுக்க  நேர்மறை சிந்தனையுடன், சுறுசுறுப்பாக செயல்பட உதவும். காலையில் எழுந்ததும் நடப்பது உங்களுடைய வளர்ச்சிக்கு மாற்றத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.

இதனால் உடலில் சேரும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வாக்கிங் சென்று விடுவதால் அன்றைய நாளில் உங்களுடைய உடற்செயல்பாடு எந்த தடையுமின்றி நிறைவேறி விடுகிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை நேர உடற்பயிற்சியை தேர்வு செய்யலாம். 

எதிர்பாராத மற்ற வேலைகளால் உடற்பயிற்சியை தள்ளிப் போடும் சூழல்கள் ஏதும் காலையில் இருக்காது. காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய மனநலம் மேம்படுகிறது. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் காலையில் நடைபயிற்சி செல்வது நல்ல பலனை அளிக்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். இதை சரியாக செய்வதால் தானாகவே எடை குறையும்.  

35
Evening walks for weight loss in tamil

Evening walks for weight loss in tamil

மாலையில் வாக்கிங்: 

காலையில் நடப்பது போலவே மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதும் குறிப்பிட்ட பலன்களை தருகின்றன. மாலை 5 முதல் 7 மணிக்குள்ளாக வாக்கிங் செல்ல வேண்டும். காலையில் மற்ற வேலைகள் இருப்பவர்கள் மாலையில் வாக்கிங் செல்லலாம். இது சோர்வை நீக்கி புத்துணர்வை தரும். இரவில் ஆழ்ந்த தூக்கம் வர நடைபயிற்சி உதவும், செரிமானத்தை மேம்படுத்தும்.    

அதிகாலையில் எழுந்து நடக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் உடலில் மைய வெப்பநிலை சற்று அதிகமாக காணப்படும். இது உடற்செயல்பாடுகளில் நல்ல பலனை கொடுக்கும். ஆனால் நடைபயிற்சியை காட்டிலும் மற்ற உடற்பயிற்சிகளை மாலையில் செய்யும் போது எடை இழப்புக்கு உதவிகரமாக இருக்கும். 

45
Best Time To Walk For Weight Loss in tamil

Best Time To Walk For Weight Loss in tamil

காலை vs மாலை எது வாக்கிங் செல்ல சிறந்தது? 

காலை அல்லது மாலை என இரண்டு நேரங்களிலும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நன்மைகளையே தரும். ஆனால் எடையை  குறைக்க விரும்புபவர்கள் காலையில் நடப்பது தான் சிறந்தது. நிபுணர்கள் காலை நேர வாக்கிங் எடை குறைப்பில் நல்ல பலன்களை தருவதாகக் கூறுகின்றனர்.

குறிப்பாக நிலைப்புத்தன்மையுடன் இருப்பதே எடை குறைப்பு பயணத்தில் முதன்மையாக கருதப்படுகிறது. அதாவது தொடர்சியற்ற செயல்பாடுகள் எடை குறைப்பை தாமதப்படுத்தும். தினசரி உடற்பயிற்சியே உடல் எடையை குறைக்க உதவுகிறது. அத்துடன் சரியான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

 

55
Benefits of walking for weight loss in tamil

Benefits of walking for weight loss in tamil

எந்த நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது தனிநபரின் வாழ்க்கையை முறைகளை பொறுத்தது.  காலை நேரத்தில் வாக்கிங் சென்றால் உங்களுடைய வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படும். ஆனால் மாலை நேரத்தில் அதே அளவுக்கு நன்மைகளை நீங்கள் பெறுவது கடினம் தான். நீங்கள் சரியான உணவுப் பழக்கத்துடன் காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அதற்கான பலன்களை காண முடியும்.

இதையும் படிங்க:  ஈஸியா '1' கிலோ எடை குறைக்கலாம்.. ஆனா அதுக்கு 'எத்தனை' காலடிகள் நடக்கனும் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved