MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஈஸியா '1' கிலோ எடை குறைக்கலாம்.. ஆனா அதுக்கு 'எத்தனை' காலடிகள் நடக்கனும் தெரியுமா? 

ஈஸியா '1' கிலோ எடை குறைக்கலாம்.. ஆனா அதுக்கு 'எத்தனை' காலடிகள் நடக்கனும் தெரியுமா? 

Steps Per Day For Weight Loss : ஒரு கிலோ எடையை குறைக்க எத்தனை காலடிகள் நடக்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 09 2024, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
walking benefits in tamil

walking benefits in tamil

எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும் முடியாத காரியம் அல்ல. தொடர்ந்து முயற்சி செய்வது எடையை குறைக்க உதவும். உங்களால் ரொம்ப நேரம் நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாவிட்டாலும், தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்வது எடையை குறைக்க உதவும். எடையைக் குறைய நடைபயிற்சி மிகவும் உதவுக்கூடிய ஒன்றாகும். 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நாம் நடக்கும் காலடிகளின் எண்ணிக்கையை பொறுத்து பலன்களை பெறலாம். பொதுவாக 1 கிலோ எடையைக் குறைக்க எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Steps per day for weight loss in tamil

Steps per day for weight loss in tamil

எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும்? 
 
ஒரு கிலோ எடை என்பது 7,700 கலோரிகளாகும். அதனால் ஒரு கிலோ எடையை நீங்கள் குறைக்க விரும்பினால் 7 ஆயிரத்து 700 கலோரிகளை எரிப்பது அவசியமாகிறது. சுமார் 70 கிலோகிராம் எடையுள்ள ஒருவர் ஒரு நாளில் 1000 காலடிகளை நடந்து முடிக்கும்போது தோராயமாக 40 - 50 கலோரிகள் எரிகின்றன. இந்த கலோரிகள் ஒரு நபரின் நடையின் வேகம், எடை, அவர் எட்டு வைக்கும் தூரம், நிலப்பரப்பு போன்றவை அடிப்படையில் மாறலாம். 

இதையும் படிங்க: வாக்கிங்; எத்தனை' காலடிகள் நடந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா? 

36
Weight loss tips in tamil

Weight loss tips in tamil

ஒருவர் 10 ஆயிரம் காலடிகள் நடந்தால்  தோராயமாக 400 முதல் 500 கலோரிகளை எரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 7,700 கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட   1 லட்சத்து 92 ஆயிரத்து 500 முதல் 3 லட்சத்து 85 ஆயிரம்  காலடிகள் நடக்க வேண்டும். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்  15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.  \

ஆனால் இவ்வளவு காலடிகள் நடப்பது பலருக்கு முடியாத காரியமாகும். ஆகவே நாளொன்றுக்கு  10 ஆயிரம் காலடிகள் என்ற அடிப்படையில் நடக்கத் தொடங்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எடையை குறைக்க நடைபயிற்சியுடன் சில உடற்பயிற்சிகளையும் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் விரைவில் எடையை குறைக்க முடியும். 

46
Walking and calorie burn in tamil

Walking and calorie burn in tamil

எடை குறைக்கும் பயிற்சிகள்: 

எடையை கணிசமாக குறைக்க அன்றாட வாழ்வில் பல்வேறு உடற்செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.  கார்டியோ பயிற்சிகள், வலிமை பயிற்சிகள் (strengthen workouts), ஹிட் பயிற்சிகளை (HIIT) செய்யலாம். இவை உடலை வலிமையாக்குவதோடு எடை குறைவதையும் ஊக்குவிக்கிறது. இதனோடு சரியான உணவு பழக்கம் அவசியமாகிறது.

இதையும் படிங்க: பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!

56
How Many Steps Help to Reduce 1 kg In Tamil

How Many Steps Help to Reduce 1 kg In Tamil

காலடிகளை கவனித்தல்: 

தினமும் நீங்கள் நடக்கும் தூரத்தையும், காலடிகளின் எண்ணிக்கையையும் கண்காணிப்பது அவசியம். நாள்தோறு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். பிட்னஸ் ஆப்ஸை சரியாக உபயோகித்து உங்கள் காலடிகளை கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் சற்று முன்னேற்றம் காணும் வகையில் காலடிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி செய்யலாம். 

66
Walking and fitness in tamil

Walking and fitness in tamil

தொடர் முயற்சி: 

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நிலைப்புத்தன்மையை கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு நாள் சரியான உணவு, தூக்கம், நடைபயிற்சி என செய்து விட்டு மறுநாள் எதையும் செய்யாமல் இருக்கக் கூடாது. தொடர்ந்து ஒழுங்காக நடைபயிற்சி செய்ய வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றுவதோடு ஆரோக்கியமான உணவு பழக்கம், நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான மனநிலை ஆகியவை இருந்தால் கணிசமாக எடையைக் குறைக்கமுடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆப்பிள் நறுக்கியதும் கருப்பாகிறதா? நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக வைக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved