பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!
Walking During Periods : நடைபயிற்சி செய்யும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் வாக்கிங் செல்லலாமா? கூடாதா? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
Walking In Tamil
தினமும் வாக்கிங் செல்வது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆம், நாம் கடினமான உடல் பயிற்சிகளை செய்வதை விட தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் மட்டும் போதும் உடல் எப்போதுமே பிட்டாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
Walking Benefits In Tamil
ஆனால், மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செல்லலாமா? அது நல்லதா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. ஏனெனில், ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதாவது, மாதவிடாயின் நாட்களில் சில பெண்களுக்கு கடுமையான வலி இருக்கும். அதனால் அவர்கள் ரொம்பவே அவஸ்தப்படுவார்கள். மேலும் இன்னும் சில பெண்களுக்கோ அந்த வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு இருக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி செய்யும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் வாக்கிங் செல்லலாமா? கூடாதா? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் போறவங்க பண்ற '5' தவறுகள் இதுதான்.. சரியா செஞ்சா தான் 'நிறைய' நன்மை இருக்கு!!
Walking Benefits During Periods In Tamil
மாதவிடாய் சமயத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
ரத்த ஓட்டம் சீராக இருக்கும்:
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். இது தவிர வயிற்று வீக்கம் உட்பட்ட பல உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய
நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தம் குறையும்:
மாதவிடாய் சமயத்தில் நீங்கள் வீட்டிலோ அல்லது வெளியிலயோ வாக்கிங் செல்வதால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல மாதவிடாய் நாட்களில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த நாட்களில் மன அழுத்தத்துடன் இருந்தால் மாதவிடாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
side effects of walking during periods in tamil
மனநிலை மேம்படும்
பொதுவாகவே நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் மனநிலை மேம்படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். அதுவும் குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்தால் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் எரிச்சலை தவிர்க்க இது உதவுகிறது.
இதையும் படிங்க: வாக்கிங்; எத்தனை' காலடிகள் நடந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?
மாதவிடாய் சமயத்தில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள்:
இரத்தப்போக்கு அதிகரிக்கும்:
சில பெண்களுக்கு ஏதேனும் உடல் உறுப்பு செய்தால் அவர்களுக்கு இரத்தப்போக்கு அதிகரிக்கும். எனவே நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது இரத்தப்போக்கு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
தசை சோர்வாகும்
மிகவும் தீவிரமான அல்லது நீண்ட நேரம் வாக்கிங் செய்தால் விரைவிலேயே தசை சோர்வடைந்துவிடும். இதனால் அதிகமான கால் வலி ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.