MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாக்கிங் போறவங்க பண்ற '5' தவறுகள் இதுதான்.. சரியா செஞ்சா தான் 'நிறைய' நன்மை இருக்கு!! 

வாக்கிங் போறவங்க பண்ற '5' தவறுகள் இதுதான்.. சரியா செஞ்சா தான் 'நிறைய' நன்மை இருக்கு!! 

Walking Mistakes : வாக்கிங் போகும் நபர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி என இங்கு காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
Published : Dec 04 2024, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய எளிமையான பயிற்சி தான் நடைபயிற்சி. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு எவ்வித உபகரணங்களும் தேவையில்லை. செலவில்லாமல் வீட்டிலேயெந் கூட செய்யலாம். உங்களிடம் கொஞ்சம் நேரம் மட்டும் இருந்தால் மட்டும் போதும். பல நோய்களிலிருந்து வாக்கிங் செல்வது உங்களை காப்பாற்றும்.

உங்களுடைய உடலையும் நல்ல வடிவமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அமெரிக்காவை சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்களாவது ஏரோபிக் பயிற்சிகளை (Aerobic Exercises)  செய்ய அறிவுறுத்துகிறது. எடையை குறைக்க உதவும் இந்த பயிற்சிகள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

ஏரோபிக் பயிற்சிகளில் நடைபயிற்சியும் அடங்கும். தினமும் 30 நிமிடம் நடந்தால் கூட ஐந்து நாட்களில் 150 நிமிடங்கள் நடைபயிற்சியை எளிதாக செய்யலாம். ஆனால் நடைபயிற்சியை முறையாக செய்வதால் மட்டுமே அதன் முழுப்பலன்களை அனுபவிக்க முடியும். நடைப்பயிற்சியின் போது நாம் செய்யும் சில தவறுகளால் அதன் பலன்களை நாம் முழுமையாக பெறமுடிவதில்லை.

சில நேரங்களில் நடைபயிற்சியை முறையாக செய்யத் தவறும் போது அவை காயங்களை கூட ஏற்படுத்தலாம். நடைபயிற்சி செய்யும்போது நாம் செய்யும் சில பொதுவான தவறுகளையும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை குறித்தும் இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க:  பவர் வாக் பற்றி தெரியுமா? உடல் எடையை குறைக்க இந்த 'வாக்கிங்' முறை தான் சிறந்தது!!

37
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

தோரணை: 

உதாரணமாக, நீங்கள் நடை பயிற்சி செய்யும்போது செல்போனை பயன்படுத்துவது உங்களுடைய கவனத்தை சிதறடிக்கும். இதனால் உங்களுடைய தோரணை (posture) மாறலாம். பொதுவாம எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் சரியான தோரணையில் செய்வதுதான் நல்ல பலன் தரும். நடைப்பயிற்சியின் போது உங்களுடைய தோரணை அடிக்கடி மாறுவது தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கூட ஏற்படுத்தக்கூடும்.

செல்போன் பயன்படுத்திக் கொண்டு நடப்பது உங்களுடைய உடலின் சமநிலையை மாற்றுகிறது. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே நீங்கள் நடைபயிற்சி செய்யும் போது செல்போனை பார்க்காமல் நிமிர்ந்த தோற்றத்துடன் சுறுசுறுப்பாகக் கைகளை வீசி நடப்பது அவசியம். 
 

47
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

சரியான காலணி: 

உங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சரியான காலணிகளை அணிவது அவசியம்.  ஏனென்றால் பொருத்தமற்ற காலணிகளை அணிவது கால்களில் வலியை ஏற்படுத்தலாம். சிலருக்கு கொப்புளங்கள், கால் வலி போன்றவை வரலாம். குஷனிங் இல்லாத காலணி அல்லது ஷூ அணிந்தால் மூட்டு வலி, பாதங்களில் வேதனை உண்டாகலாம். பொருத்தமான ஷூ அணிந்து நடந்தால் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. கால்களும் பிற காயங்களிலிருந்து பாதுகாக்கப்படும். 

இதையும் படிங்க:  உங்க வயசுக்கு தினமும் 'எத்தனை' நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா?

57
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

நீரேற்றமாக இருங்கள்: 

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது உடம்பில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன.  சுறுசுறுப்பாக ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டால் வியர்வை நன்கு வெளியேறும். இதனால் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு காரணமாகிவிடும். அதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.

இதற்கு அதிகளவில் தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது. உடலில் நீரிழப்பு ஏற்பட்ட பின்னர் நீரேற்றமாக இல்லாவிட்டால் இரத்த ஓட்டம் பாதிக்கும். நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்பாகவும் நடந்து முடித்த பிறகும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நடைபயிற்சி  செல்லும் போது உங்கள் கைகளில் தண்ணீர் கொண்டு செல்வது நல்லது. 

67
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

எப்படி நடக்க வேண்டும்? 

நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கால்களை தூக்கி வைத்து நடக்க வேண்டும். தரையில் கால்களை தேய்த்தப்படி, சாய்ந்த நிலையில் நடக்கக்கூடாது. இப்படி செய்வதால் உடல் நன்றாக இயங்காது. நிமிர்ந்தபடி நேராக பார்த்துக் கொண்டு நடக்க வேண்டும். தோள்கள் தளர்வாக, கைகள் முன்னும் பின்னும் செல்லும் வண்ணம் நடக்கவேண்டும்.  ஒருபோதும் தரையை பார்த்தபடி நடக்கக்கூடாது. உங்களுடைய உடலை சரியான வடிவத்தில் வைத்து நடக்காமல் அலட்சியமாக நடைபயிற்சி மேற்கொண்டால் தசைப்பிடிப்பு, மூட்டு வலி முதுகு வலி போன்றவை வரலாம். 
 

77
Walking Mistakes In Tamil

Walking Mistakes In Tamil

ஏன் சரியான தோரணை அவசியம்? 

நடைபயிற்சி நம்முடைய கால்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் சரியான முறையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது தொடைப் பகுதி வலுவாகிறது. மூட்டுகள் உறுதியாகின்றன. ஆனால் சரியான தோரணையை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மூட்டுகளும், தசைகளும் பாதிப்பை சந்திக்கின்றன.

இதனால் கழுத்து, முதுகில் வலி ஏற்படுகிறது. எப்போதும் தளர்வான தோள்கள் விரிந்த மார்பு நிமிர்ந்த தோற்றத்தில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த பலன்களை பெற்றுத் தரும். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் கைகளை கண்டிப்பாக வீசியபடி நடக்க வேண்டும். நடைபயிற்சிக்கு முன்பும் பின்பும் ஸ்ட்ரெச்சிங் செய்வது அவசியமாகிறது. இது உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி தவறுகள்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shoe Cleaning Tips: வாஷிங் மெஷினில் ஷூ துவைக்கிறீங்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
Recommended image2
மணிக்கணக்கில் மொபைல் பார்ப்பவர்களா நீங்க? கண் பாதிப்பை தடுக்க மருத்துவர்கள் தரும் முக்கிய டிப்ஸ்!
Recommended image3
Healthy Idli Recipe: வெறும் அரிசி, உளுந்துல இட்லி செய்யாதீங்க; இந்த 5 பொருளை சேர்த்தா செம ஹெல்தி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved