இந்த '4' காய்களை நறுக்கியதும் சமைக்காதீங்க! ஒரு சத்து கூட கிடைக்காது
எந்தெந்த காய்கறிகளை நறுக்கியவுடனே சமைக்கக் கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.

Do Not Cook These Veggies Right After Chopping
காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவற்றை சமைக்கும் தன்மையை பொறுத்து தான் அதன் முழுமையாக கிடைக்கும். அப்படி சில காய்கறிகளை இப்படித்தான் சமைக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதன்படி சமைக்காவிட்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்தவகையில் சில காய்கறிகளை நறுக்கியவுடனே சமைக்கக் கூடாது. இல்லையெனில், அவற்றின் நிறம், சுவை மற்றும் சத்துக்கள் மாறுபடும். அவை என்னென்ன காய்கறிகள் என்று இந்த பதிவில் காணலாம்.
வெண்டைக்காய் :
வெண்டைக்காயை நறுக்கிய உடனேயே சமைக்க கூடாது. ஏனெனில், அது ஒட்டும் தன்மையை கொண்டிருப்பதால், அதை நறுக்கியவுடனேயே சமைத்தால், அது மேலும் ஒட்டும் தன்மையாகிவிடும். சுவையையும் கெடுத்துவிடும். எனவே, வெண்டைக்காயை சமைப்பதற்கு முன் அதை நன்கு கழுவி காய வைத்து பிறகு நறுக்கி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டுங்கள். பிறகு எண்ணெய் ஊற்றாமல் அதை மிதமான தீயில் கடாயில் போட்டு வதக்குங்கள். பின் நீங்கள் எப்படி சமைக்க விரும்புகிறீர்களோ அதன்படி சமைக்கலாம். இப்படி சமைத்தால் மட்டுமே வெண்டைக்காயின் ஒட்டும் தன்மை நீங்கும். அதன் சுவையும் மாறாமல் இருக்கும்.
காலிஃபிளவர் :
காலிஃபிளவருக்குள் பூழுக்கள், பூச்சிகள் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலிஃபிளவரை சமைப்பதற்கு முன் முதலில் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி பிறகு சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். வேண்டுமானால் கொதிக்க கூட வைக்கலாம். இப்படி செய்தால் அதனுள் இருக்கும் புழுக்கள், பூச்சிகள் வெளியே வந்துவிடும். பிறகு நீங்கள் விரும்பியபடி சமைத்து சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ் :
காலிஃபிளவருக்குள் பூழுக்கள் இருப்பது போலவே முட்டைக்கோஸிலும் இருக்கும். எனவே முட்டைக்கோஸை சமைப்பதற்கு முன் அதை நன்றாக வெட்டி உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்தால் புழுக்கள் வெளியே வந்துவிடும். பிறகு நீங்கள் விரும்பிய வண்ணம் சமைக்கலாம்.
கத்திரிக்காய் :
கத்திரிக்காயிலும் பூழுக்கள், பூச்சிகள் இருக்கும். மேலும் அதை நறுக்கிய சிறிது நேரத்திலேயே கருப்பாகவும் மாறிவிடும். அதை உடனேயே சமைத்தாகும் கூட, சிறிது கசப்பாக இருக்கும் மற்றும் அதன் ஊட்டச்சத்துக்களும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கத்தரிக்காயை நறுக்கிய உடனே சிறிது நேரம் உப்பு தண்ணீரில் வைக்கவும். பிறகு சமைத்தால் கத்திரிக்காயின் சுவை மற்றும் ஊட்டச்சத்து குறையாது.