Bhogi Pongal 2024: போகி பண்டிகை அன்று மறந்து கூட பகலில் இப்படி செஞ்சிடாதீங்க! செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
பொங்கலுக்கு முந்தைய தினம் கொண்டாடப்படும், போகி பண்டிகை அன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
bhogi
தமிழர்களின் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் திருவிழா. பொங்கலுக்கு முந்தைய தினம், "பழையன கழிதலும்... புதியன புகுதலும்", என்கிற பழமொழிக்கு ஏற்ப வீட்டை மாசு படுத்தும் மற்றும் நமக்கு தரித்திரத்தை உண்டாக்கும் சில பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி விட்டு, புதிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டிய நாளாக இந்த நாள் இருந்து வருகிறது.
கிராமங்களில் தற்போது வரை பலர் போகி பண்டிகையை தங்களுடைய பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடி வந்தாலும், நகரங்களில் வாழ்ந்து வரும் பலர்... இந்நாளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சரி இந்த போகி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த போகி பண்டிகையில் செய்ய வேண்டிய, மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்!!
செய்ய வேண்டிய விஷயங்கள்:
'போகி' அன்று வீட்டு தெய்வங்களை நம் முன்னோர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். எனவே ஒவ்வொரு ஆண்டும், போகி பண்டிகை அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு. போகி அன்று தங்களுடைய குடும்பத்தில் பெண் குழந்தைகள் யாரேனும் சிறுவயதில் தவறி இருந்தால்... அவர்களுக்கு சேலை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
போகி பண்டிகையை ஒரு மருத்துவ முறையாகவும் நம் முன்னோர்கள் கையாண்டு வந்துள்ளனர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதால், அறுவடைகள் நடந்து அரிசி மூட்டைகளை விவசாயிகள் தங்களுடைய வீட்டில் கொண்டு வந்து சேகரிப்பார்கள். அந்த சமயத்தில் பூச்சி மற்றும் கிருமிகள் அண்டாத அளவுக்கு, தானியங்களை பாதுகாக்கும் வகையில், வீடு முழுக்க மஞ்சள் நீர் தெளித்து, சாணம் பூசி சாம்பிராணி புகை போடுவது கிருமிகளை வீட்டில் அண்ட விடாமல் தடுக்கும்.
போகி பண்டிகை அன்று மழைக்காலத்தில் நிரம்பி இருக்கும் ஏரி, குளம் மற்றும் கிணறுகளில் நெல்லி - பனை மரங்களின் துண்டுகளை போடுவதை கொங்கு மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இது தண்ணீரை சுத்திகரிக்கவும், நீரின் சுவையை அதிகரிக்கவும் செய்யப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சரியான புரிதல் இல்லாததால்.. கண்டகண்ட மரங்களை தண்ணீரில் வீசி சிலர் காற்றை மாசு படுத்துகிறார்கள். எனவே ஒருபோதும் நீரை அசுத்தமாக்கும் மரங்களையும் குச்சிகளை போடாதீர்கள். இது நீரில் வாழும் மீன், ஆமை போன்ற விலங்குகளையும் பாதிக்கிறது.
Hen meat price
செய்ய கூடாத விஷயங்கள்:
போகி பண்டிகை அன்று பெண்கள் மற்றும் ஆண்கள் மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல் ஆண்கள் போதை வஸ்து போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.
பொங்கல் 2024 : எப்பவும் ஒரே மாதிரி இல்லாம, இந்த தினை பொங்கல் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..
வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் போகி பண்டிகை அன்று விடுமுறை நாள் என்பதால்... வீட்டில் உள்ள வேலைகளை முடித்து விட்டு ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்து தூங்குவார்கள். இந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள். போகி அன்று தூங்குவது, வீட்டு தெய்வத்தை கோபப்படுத்தும் என கூறப்படுகிறது.
சுகாதாரத்தை பேணும் வகையில், நம்முடைய காற்றை மாசு படுத்தாதவாறு மக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள எரிக்க கூடிய பொருட்களை மட்டுமே எரிக்க வேண்டும். டயர், ரப்பர், பிளாஸ்டிக், மற்றும் கார்பன் டை ஆக்சைடை அதிகமாக வெளியேற்றும் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.