பொங்கல் 2024 : எப்பவும் ஒரே மாதிரி இல்லாம, இந்த தினை பொங்கல் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

இந்த பொங்கல் நாளில் தினை பொங்கல் எப்படி செய்வதென்று என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Pongal 2024 Recipes : Traditional healthy Thinai pongal recipe in tamil Rya

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை முதல் நாளை பொங்கல் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர். தமிழர் திருநாள், அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் அனைவரும் வழக்கம் போல் அனைவரும் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பல காய் கூட்டு ஆகியவை செய்து சாப்பிடுவார்கள். எனினும் சிலர் வித்தியாசமான பொங்கல் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு தினைப் பொங்கல் ஒரு சிறப்பான தேர்வு. இந்த பொங்கல் நாளில் தினை பொங்கல் எப்படி செய்வதென்று என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தினை அரிசி : ¼ கிலோ

பாசிபருப்பு – 100 கிராம்

நெய் – தேவையான அளவு

இஞ்சி – 1 துண்டு

மிளகு, சீரகம், - 1 ஸ்பூன்

பெருங்காயம் – தேவையான அளவு

முந்திரி – 10

உப்பு தேவையான அளவு

மாட்டுப் பொங்கல் 2024 : மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

செய்முறை :

ஒரு கடாயில் தினை அரிசியை சேர்ந்து நிறம் மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் பாசிபருப்பை சேர்ந்து லேசாக வறுக்கவும். இரண்டையும் சேர்ந்து 1-க்கு 3 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும். பின்னர் நெய்யில் முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கற்வேப்பிலை சேர்ந்து தாளித்து நன்றாக கிளறவும்.

சாதாரண வெண் பொங்கலுக்கு செய்யும் சாம்பார், சட்னியை வைத்து இந்த திணை பொங்கலை சாப்பிடலாம். மேலும் இந்த பொங்கலை குக்கரில் வைக்காமல் பானையிலும் செய்யலாம். வேக வைக்கும் போதே சிறிது நெய் சேர்த்தால் வாசனையும், சுவையும் அதிகரிக்கும்.

 

Pongal 2024 : இந்த பொங்கலுக்கு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலங்கள் டிசைன்கள்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios