MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!

Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!

சமையலுக்கு எண்ணெய் ரொம்ப முக்கியம் தான். ஆனா, அளவுக்கு அதிகமா எண்ணெய் யூஸ் பண்றது உடம்புக்கு நல்லது இல்ல. கொலஸ்ட்ரால், ஹார்ட் பிளாக்னு பல பிரச்னைகளுக்கு இதுதான் காரணம். உங்க சமையல்ல எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க சூப்பரான 7 டிப்ஸ் இதோ...

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 25 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சூப்பர் வழி இருக்கே.!

சூப்பர் வழி இருக்கே.!

சமையலில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஒரு சூப்பர் வழி. நல்ல தரமான நான்-ஸ்டிக் பாத்திரத்தில், வெறும் 1 ஸ்பூன் எண்ணெயிலேயே சுவையான சாப்பாடு செஞ்சிடலாம். சாதாரண பாத்திரங்களை விட இது கொஞ்சம் காஸ்ட்லிதான், ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஸ்பூன் வைத்து அளந்து ஊற்றுங்கள்.!

ஸ்பூன் வைத்து அளந்து ஊற்றுங்கள்.!

நிறைய பேர் சமைக்கும்போது, பாட்டிலில் இருந்து நேரடியாக எண்ணெயை ஊற்றுவார்கள். இதில் அளவு தெரியாமல் எண்ணெய் அதிகமாகிட வாய்ப்புள்ளது. அதனால், இனிமேல் ஸ்பூன் வைத்து அளந்து ஊற்றுங்கள். சரியான அளவு, சரியான ஆரோக்கியம்.

Related Articles

Related image1
Cooking Tips: பருப்பு முதல் பால் வரை... உணவு தீய்ந்து போச்சா? வாசனையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
Related image2
Cooking Tips : காய்கறிகளை சமைக்குறப்ப இதை கவனிங்க! எந்த மசாலாவை எப்போது போட்டால் சுவை அதிகமாகும்?
37
மாறுபட்ட யோசனை நல்ல பலனை தரும்

மாறுபட்ட யோசனை நல்ல பலனை தரும்

ஒரு பொருளை டீப்-ஃப்ரை செய்யும்போது நிறைய எண்ணெய் தேவைப்படும். அதற்குப் பதிலாக, நீங்கள் பேன்-ஃப்ரை அல்லது ஷாலோ-ஃப்ரை முறையைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, பன்னீரை எண்ணெயில் மூழ்கிப் பொரிப்பதற்குப் பதிலாக, தோசைக்கல்லில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுக்கலாம்.
47
சமையல் பாத்திரங்களுக்க தொப்பி போடுங்க

சமையல் பாத்திரங்களுக்க தொப்பி போடுங்க

சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால், எண்ணெய் பயன்பாடு குறையும். ஏனென்றால், மூடி போடும்போது உருவாகும் ஈரப்பதத்திலேயே உணவு சீக்கிரமாக வெந்துவிடும். குறைவான எண்ணெயில் சமைத்தாலும் பாத்திரத்தில் ஒட்டாது.

57
ஆற்றலை தரும் ஆவியில் சமைக்கும் உணவுகள்

ஆற்றலை தரும் ஆவியில் சமைக்கும் உணவுகள்

ஆவியில் வேகவைப்பது உடலுக்கு ரொம்பவே நல்லது. இது எண்ணெய் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும். காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு, சுடுதண்ணீரில் லேசாக வேகவைக்கலாம் அல்லது பிரஷர் குக்கரில் சமைக்கலாம். இதனால் எண்ணெய் தேவை குறையும்.
67
 எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும்

எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும்

பேக்கிங் முறையில் மிகக் குறைவான எண்ணெய்தான் தேவைப்படும். கடினமான காய்கறிகளை பேக் செய்வதற்கு முன்பு, அவற்றை வேக வைத்துக்கொள்ளலாம். சிக்கன் அல்லது மட்டனை மாரினேட் செய்து, கொஞ்சமாக எண்ணெய் தடவி ஓவனில் பேக் செய்தால், எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும்.
77
 இரண்டே சொட்டு எண்ணெயில் பொரிக்கலாம்

இரண்டே சொட்டு எண்ணெயில் பொரிக்கலாம்

இந்த டெக்னாலஜி காலத்தில், ஏர் ஃபிரையர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் மிகக் குறைவான எண்ணெயிலேயே பொரித்த உணவுகளைச் செய்யலாம். நீங்கள் ஒரு நல்ல கிச்சன் சாதனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், ஏர் ஃபிரையர் ஒரு பெஸ்ட் சாய்ஸ். இது 5,000-லிருந்து 10,000 ரூபாய் விலையில் கிடைக்கும். இதில் சமோசா, பஜ்ஜியில் இருந்து சிக்கன், பன்னீர் வரைக்கும் இரண்டே சொட்டு எண்ணெயில் பொரிக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
உணவு சேர்க்கைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rice Water Benefits: இனி அரிசி கழுவிய தண்ணீரைக் கீழே ஊத்தாதீங்க! முகத்தில் தடவினால் நடக்கும் அதிசயத்தைப் பாருங்க!
Recommended image2
RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
Recommended image3
Relationship Advice: உறவை முறிக்கும் அந்த ஒரு பெரிய தவறு... சரிசெய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Cooking Tips: பருப்பு முதல் பால் வரை... உணவு தீய்ந்து போச்சா? வாசனையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Cooking Tips : காய்கறிகளை சமைக்குறப்ப இதை கவனிங்க! எந்த மசாலாவை எப்போது போட்டால் சுவை அதிகமாகும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved