நீங்கள் சமைக்கும் உணவின் சுவையை அதிகரிக்க எந்த மசாலாவை எப்போது சேர்க்க வேண்டுமென்று இந்த பதிவில் காணலாம்.

நாம் சமைக்கும் உணவின் உண்மையான சுவை அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் தான் உள்ளது. உணவின் சுவையை அதிக மசாலா சேர்க்க வேண்டிய தேவையில்லை. அதை சரியான நேரத்தில் சேர்த்தால் மட்டுமே போதும், உணவின் சுவையை அதிகரித்து விடலாம். ஆனால் பெரும்பாலானோர் இதைப் பின்பற்றுவதில்லை. இதனால் தான் அவர்கள் சமைத்த உணவு சுவையாக இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சமைத்த உணவின் சுவையை அதிகரிக்க எந்த மசாலாவை, எப்போது சேர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  1. எண்ணெயில் பொரிக்க கூடியவை :

பொதுவாக எந்த உணவு சமைக்க தொடங்கினாலும் முதலில் கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் சீரகம், வெந்தயம், பெருங்காயம், சோம்பு அல்லது கிராம்பு ஆகியவற்றை சேர்க்கவும். நறுமணம் கொண்டு இந்த மசாலா பொருட்களை சூடான எண்ணெயில் பொரிக்கும் போது மணம் மற்றும் உணவின் சுவை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

2. மஞ்சள் தூள் :

மஞ்சள் தூளை எண்ணெயில் கண்டிப்பாக சமைக்கவும். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் பண்புகள் உடலில் சரியாக உறிஞ்சப்படும். ஆகவே நீங்கள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

3. வத்தல் பொடி :

வத்தல் பொடியை ஒருபோதும் நேரடியாக எண்ணெயில் சேர்க்கவே கூடாது. ஏனெனில் அது தீய்ந்து போய்விடும். மேலும் உணவின் சுவையையும் கசப்பாக மாற்றிவிடும். எனவே வெங்காயம், தக்காளி வதக்கும்போது அதனுடன் சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல காய்கறிகளை எண்ணெயில் சேர்க்கும் போதும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

4. உப்பு :

காய்கறிகளில் உடனே உப்பு சேர்க்க கூடாது. அப்படி செய்தால் காய்கறிகள் சீக்கிரமாகவே மென்மையாக மாறக்கூடும். இல்லையெனில் தண்ணீர் கூட வெளியேற்றும். எனவே, சமையலின் நடுப்பாதியில் உப்பை சேர்க்கவும் இதனால் உணவின் சுவை மற்றும் அமைப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

5. கொத்தமல்லி தூள் :

கொத்தமல்லி தூள் உணவின் நறுமணம் மற்றும் சுவையை அதிகரிக்க தான் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் அதை ஆரம்பத்தில் அல்லது முடிவில் சேர்க்கக்கூடாது. இதை குழம்பு அல்லது காய்கறி பாதி வெந்தவுடன் சேர்க்கவும்.

6. கரம் மசாலா தூள் :

வறுத்த மசாலா பொருட்களின் கலவை தான் இது. இதை நீங்கள் அடுப்பை அணைப்பதற்கு முன் உணவில் சேர்க்க வேண்டும். முன்னமே சேர்த்தால் அதன் சுவை மாறிவிடும்.

7. மிளகு தூள் மற்றும் சாட் மசாலா :

இவை இரண்டையும் சமையல் முடித்த பிறகு தான் சேர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெப்ப தன்மையுடையதால், சமைக்கும் போது கொஞ்சம் கூட சேர்க்கவே கூடாது. வேக வைத்த காய்கறிகள், சாலட், சூப் போன்றவற்றில் சிறிதளவு தூவினால் சுவை அருமையாக இருக்கும்.