- Home
- Lifestyle
- Breath Exercise: காலை எழுந்ததும் உடல் ஆரோக்கியமாக இருக்க...இந்த மூச்சு பயிற்சி கடைபிடிப்பது அவசியம்...
Breath Exercise: காலை எழுந்ததும் உடல் ஆரோக்கியமாக இருக்க...இந்த மூச்சு பயிற்சி கடைபிடிப்பது அவசியம்...
Breath Exercise: நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்ட, மூச்சு பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆழமாக மூச்சி பயிற்சி நம்முடைய உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும். நமது உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்.

breath exercise
இன்றைய நவீன கால கட்டத்தில், உடல் ஆரோக்கியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சி எடுப்பார்கள். அதிலும் அந்த அழகை மேம்படுத்த நிறைய பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வார்கள், நம்முடைய ஆரோக்கியம் மற்றும் அழகை இயற்கையான வழிமுறைகள் மூலமாகவே மேம்படுத்தலாம். அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
breath exercise
நுரையீரலுக்கு சிறந்தது:
இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். நுரையீரலில் ஆழமாக ஆக்சிஜனை பெறுவதன் மூலமாகவும், சளி மற்றும் பிற திரவங்களை வெளியேற்றுவதன் மூலமும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வருவதன் மூலமாகவும் நம்மால் நுரையீரலின் திறனை அதிகரிக்க முடியும்.
breath exercise
மூச்சு பயிற்சி:
காலை எழுந்ததும், முதலில் இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.
breath exercise
பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, உங்கள் மூக்கின் வழியாக ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிப்பதன் விளைவாக கீழ் விலா எலும்புக் கூண்டு விரிவடையும், இது வயிற்றை முன்னோக்கி நகர்த்தவும் அனுமதிக்கிறது.