- Home
- Lifestyle
- High Protein Foods : ஆண்களே! 50 வயசு ஆகிட்டா? அப்ப வாரத்திற்கு 3 நாட்கள் 'இத' சாப்பிடுங்க..சும்மா உடம்பு இரும்பு மாதிரி இருக்கும்
High Protein Foods : ஆண்களே! 50 வயசு ஆகிட்டா? அப்ப வாரத்திற்கு 3 நாட்கள் 'இத' சாப்பிடுங்க..சும்மா உடம்பு இரும்பு மாதிரி இருக்கும்
50 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆண்களும் புரதச்சத்து நிறைவாக பெற என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

High Protein Foods
பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலானோர் உணவு முறையில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதிலும் குறிப்பாக ஆண்கள் 50 வயதை கடந்த போதுமான புரதத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். தசை ஆரோக்கியம் வளர்ச்சியை மாற்றம் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் புரதம் அவசியம். உடலுக்குப் தேவையான புரதம் கிடைக்கவில்லையெனில் உடல் வலுவிழந்துவிடும்.
இத்தகைய சூழ்நிலையில், வாரத்திற்கு மூன்று நாட்கள் புரதம் நிறைந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் தசை வலுவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியமாகவும், இதய செயல்படும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். அப்படி புரதம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால்
50 வயதை கடந்த பிறகு ஆண்கள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் பாலில் 8 கிராம் புரதம் உள்ளன. இது தவிர பாலில் கால்சியம் வைட்டமின் டி பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளன. அவை எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு நல்லது.
முட்டை
முட்டை ஒரு சூப்பர் ஃபுட். ஆய்வின்படி, இரண்டு முட்டையில் சுமார் 12 கிராம் உயர்தர புரதம் உள்ளதாக தெரிவிக்கின்றன. புரதம் தவிர முட்டையில் அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் ஈ, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே ஆண்கள் முட்டையை தங்களது உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இதை நீங்கள் அவித்து, ஆம்லெட், கிரேவி, சாண்ட்விச் ஆக சாப்பிடலாம். மேலும் முட்டை சப்பாத்தி, முட்டை தோசை என முட்டையை உங்களது விருப்பத்திற்கு ஏற்ப உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
சீஸ்
பாலாடை கட்டி என்று அழைக்கப்படும் சீஸில் புரதம் நிறைந்துள்ளது. ஒரு கப் சீஸில் 25 கிராம் புரதம் உள்ளன. புரதம் தவிர இதில் கால்சியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 50 வயதை கடந்த ஆண்கள் பிறந்த தேவையை பூர்த்தி செய்ய நினைத்தால் சீஸ் சிறந்த தேர்வாகும். இதில் இருக்கும் கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவும்.
பருப்பு, பயிறு வகைகள்
உண்மையில், பருப்பு மற்றும் பயிர் வகைகளில் புரதம் நிறைந்துள்ளன. இது தவிர இவற்றில் நார்ச்சத்தும் உள்ளதால் அவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக நீங்கள் சைவம் சாப்பிடுபவராக இருந்தால் கண்டிப்பாக உங்களது உணவில் பருப்பு மற்றும் பயிர் வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
மீன்
அசைவம் விரும்பி சாப்பிடும் ஆண்களுக்கு புரதத்தின் தேவையை பூர்த்தி செய்ய மீன் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவும் குறிப்பாக 75 கிராம் மத்தி மீனில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளன. இதுதவிர இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம், பொட்டாசியம், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை எலும்பு, இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
சிக்கன்
மீனுக்கு அடுத்தபடியாக சிக்கன் சிறந்த புரத உணவாகும். அதாவது 100 கிராம் சமைத்த சிக்கனில் 23 கிராம் புரதம் உள்ளன. சிக்கனை சூப்பாகவோ அல்லது கிரேவியாகவோ சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் வறுத்து அல்லது பொரித்து சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.