- Home
- Lifestyle
- Healthy Breakfast : காலைல 'இதை' சாப்பிட்டால் ஆயுசு கம்மியாகிடும்!! மூளை வேலை செய்யாது! எதை சாப்பிடனும்?
Healthy Breakfast : காலைல 'இதை' சாப்பிட்டால் ஆயுசு கம்மியாகிடும்!! மூளை வேலை செய்யாது! எதை சாப்பிடனும்?
காலை உணவாக நாம் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்யக் கூடியவை. எதை தவிர்க்க வேண்டும்? எதை சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

Healthy Breakfast
காலை நாம் உண்ணும் உணவுகள் மூளை உணவாகும். மூளை வேகத்தையும், ஆயுட்காலத்தையும் தீர்மானிப்பதே காலை உணவுகள்தான். இவை வெறுமனே வயிற்றை நிரப்ப மட்டுமல்ல, கொழுப்பைக் குறைக்கும் வளர்சிதை மாற்றம், நீண்ட ஆயுளோடு தொடர்புடையது.
காலை உணவுகள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட, சோம்பல் நீங்க காலை உணவுகளை மாற்றுவது அவசியம். காலை என்னென்ன உணவுகளை உண்ணக் கூடாது, எதை உண்ண வேண்டும் என இங்கு காணலாம். சர்க்கரை உணவுகள், மைதா உணவுகள் ஆகியவை ஆயுளை குறைக்க கூடிய சைலன்ட் கில்லர்கள். இதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அவுரிநெல்லிகள்
இந்த நெல்லிகள் இயற்கையாகவே மூளைப் பாதுகாவலர்களாக செயல்படக் கூடியவை. இதை தினமும் காலை உண்ணலாம். இதில் உள்ள அந்தோசயினின்கள் மூளைக்கு சக்தி அளிக்கும். அவுரிநெல்லிகளை சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும். நாள்தோறும் சில அவுரிநெல்லிகள் சாப்பிட்டால் நினைவாற்றல் கூர்மையாக இருக்கும்.
முட்டை
முட்டையில் கோலின் ஊட்டச்சத்து உள்ளது. இது அசிடைல்கோலின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும். நினைவாற்றல் மேம்பட, மனநிலையைக் கட்டுப்படுத்த முட்டை உதவுகிறது. முட்டை சாப்பிட்டால் தினமும் 300 மி.கி கோலைன் கிடைக்கும். இதை தினமும் செய்யும் சாப்பிடும் பெரியவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.
வால்நட்ஸ் மற்றும் சால்மன்:
மூளை ஆரோக்கியம் மேம்பட செய்யும் ஒமேகா-3 கொழுப்புகள் அவசியம். வால்நட்ஸ், சால்மன் மீன்களில் உள்ள DHA கொழுப்பு மூளை செல்களை மேம்படுத்துகிறது. காலையில் வால்நட்ஸ் அல்லது சால்மன் மீன் சாப்பிட்டால் மனநிலையை மேம்படும். பாதாம், பிஸ்தா போன்றவைகளும் எடுத்துக் கொள்ளலாம்.
ஓட்ஸ்
இது ஒரு சிறந்த காலை உணவு. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மெதுவாக ஆற்றலை வெளியிடுவதால் பசியை குறைக்கும். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.
மேலே சொன்ன உணவுகள் உங்களுடைய ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும்.