இட்லி, தோசை இவை இரண்டுமே மறுக்க முடியாத அளவுக்கு மிகவும் பிரபலமான காலை உணவாகும். ஆனால் இந்த இரண்டில் எது ஆரோக்கியமானது என்று இங்கு பார்க்கலாம்.
இட்லி, தோசை, இடியாப்பம், ஊத்தப்பம் போன்றவை மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவுகள் ஆகும். இந்த உணவுகள் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. அதிலும் குறிப்பாக இட்லி, இடியாப்பம் போன்ற அவித்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆவியில் தயாரிக்கப்படும் இந்த உணவுகள் சுவையானதும், எளிதில் ஜீரணமாகியும் விடும். சரி இப்போது விஷயம் விஷயத்திற்கு வருவோம். இட்லி அல்லது தோசை இந்த ரெண்டில் காலை உணவாக எதை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லி நன்மைகள் :
- இட்லியில் ஏராளமான வைட்டமின்கள் புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆகவே இட்லி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
- இட்லி உளுந்தம் பருப்பு, அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. உளுந்தம் பருப்பில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
- அதுபோல இட்லி ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படுவதால் அதில் கலோரி உள்ளடக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
- அதுமட்டுமில்லாமல் இட்லியில் கொலஸ்ட்ரால் அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் ஏதுமில்லை. இதனால் இரத்த அழுத்த பிரச்சனை, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயகரமான நோய்கள் வராது.
- இட்லி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் சோடியத்தின் அளவு ரொம்பவே கம்மி.
- இட்லி உளுந்தம் பருப்பு அரிசி கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது.
- இட்லி இருக்கும் புரதங்கள் தசைகளை சரி செய்யவும், கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
- இதில் இருக்கும் நான் செத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தோசை நன்மைகள் :
- வீட்டில் இருக்கும் அனைத்து நன்மைகளும் தோசையிலும் இருக்கிறது. ஆனாலும் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது. அது என்னவென்றால் சமைக்கும் முறை தான். தோசை நெய் அல்லது எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- தோசை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை வழங்கும்.
- உடல் எடையை கட்டுப்படுத்த இது உதவியாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது.
- தோசையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் தோசை பெரிதும் உதவியாக இருக்கும்.
- தோசை புளித்த மாவில் தயாரிக்கப்படுவதால், அதில் இருக்கும் ப்ரோபயோடிக்குகள் ஆரோக்கியமான பெண் முன்னுரிகளை ஊக்குவிக்க செய்யும்.
- தோசை செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த குடல் அரங்கத்தையும் மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
- தோசை சுடுவதற்கு நீங்கள் எந்த எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
இட்லி அல்லது தோசை : எது சிறந்தது ?
இட்லி, தோசை இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் எண்ணெயில் சுட்ட தோசை விட ஆவியில் வேக வைத்த இட்லி உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும். ஆகவே, இட்லி தான் பெஸ்ட் சாய்ஸ்.
