தோசை மாவுடன் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யலாம். அவை என்னவென்று இங்கு காணலாம்.
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்றுதான் தோசை. தோசையில் பல வகைகள் உள்ளன அதில் சில வகைகள் தான் நாம் விரும்பி சாப்பிடும் அதிலும் குறிப்பாக மொறுமொறுப்பான கிரிப்ஸ் ஆன தோசை பெரும்பாலானோரால் அதிகமாக விரும்பப்படுகிறது. பலவிதமான சைடிஷ்களுடன் பரிமாறப்படும் தோசையானது, அரிசி மற்றும் உளுந்து ஊற வைத்து அரைத்து புளித்த பிறகு தான் தயாரிக்கப்படுகிறது. இந்த நொதித்தல் செயல்முறையானது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இதில் ஒரு சிறிய குறைபாடு இருக்கிறது. அது என்னவென்றால், புரதச்சத்து குறைவாக இருப்பது தான்.
ஆம், புரதச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. இது உடல் வளர்ச்சி மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, நீங்கள் விரும்பி சாப்பிடும் தோசையை இன்னும் ஆரோக்கியமாகவும், புரதச்சத்து நிறைந்ததாகவும் மாற்ற விரும்பினால், தோசை மாவு அரைக்கும் போது அதனுடன் சில பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
தோசை மாவு புரதச்சத்து நிறைந்ததாக மாற்றுவது எப்படி?
1. பாசிப்பயறு
வழக்கமாக நீங்கள் அரிசி, உளுந்து சேர்த்து தான் தோசை அரைப்பீர்கள் என்றால், இந்த முறை அரிசிக்கு பதிலாக உளுந்துடன் பாசிப்பயிறு சேர்த்து ஊற வைத்து அரையுங்கள். ஏனெனில் பாசிப்பயிரில் அதிக அளவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன ல். இவை தோசையை மிக எளிதில் செரிமானமடைய செய்து விடும். மேலும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த பாசிப்பயிறு தோசையானது சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
2. குயினோவா (quinoa)
குயினோவா என்பது ஒன்பது அத்தியாவாசிய அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு முழுமையான புரதம் மூலமாகவும். தோசை மாவுக்காக நீங்கள் அரிசி மற்றும் உளுந்தை ஊறவைக்கும் போது அதனுடன் அரைக்கப் குயினோவையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை மென்மையாகவும், புரதம் நிறைந்ததாகவும் இருக்கும்.
3. சோயாபீன்ஸ்
இது புரதத்தின் சிறந்த மூலங்களில் ஒன்று. எனவே, நீங்கள் எந்த அளவிற்கு தோசை மாவு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு சோயாபீன்ஸை ஊற வைத்து பின் வேக வைத்து அதை பேஸ்ட் போலாக்கி தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து தோசை சுட்டால் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து மதிப்பும் தோசையில் தான் இருக்கும். சோயா பீன்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், தோசை விரைவிலேயே ஜீரணமாகிவிடும்.
4. கடலை மாவு
புளித்த தோசை மாவில் சுமார் 2 முதல் 5 காரணி கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து பிறகு தோசை சுடுங்கள். இந்த தோசை பார்ப்பதற்கு பொன்னிறமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். 100 கிராம் கடலை மாவில் சுமார் 20 முதல் 22 கிராம் புரதச்சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. அமராந்த்
அமராந்த்தும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இந்த சத்தான தானியத்தை இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு பிறகு அரிசி உளுந்து அரைக்கும் போது அதனுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே அரைத்து வைத்த மாவுடன் இதை தனியாக அரைத்து பிறகு குளிக்க வைத்து பயன்படுத்தவும். அமர்நாத்தில் புரதம் மட்டுமல்ல கால்சியம், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளதால் இந்த தோசை ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
குறிப்பு
மேலே சொன்ன ஐந்து பொருட்களை தோசை மாவுடன் சேர்க்கும் போது புரதத்தின் தேவை பூர்த்தியாகும். மேலும் இது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
