உடல் எடையை குறைக்கும் '6' பழங்கள்... ஆனா இப்படி சாப்பிட்டாதா நன்மை!
Fruits For Weight Loss : உடல் எடையை குறைப்பதற்கு ஆரோக்கியமான பானங்கள் தவிர, சில பழங்களும் உதவும் தெரியுமா? அவை என்னென்ன.. அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Weight loss fruits in tamil
இன்றைய நவீன காலத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கவழக்கங்களால் உடல் பருமன் பிரச்சனையானது மக்கள் மத்தியில் சகஜமாகிவிட்டது. ஆனால் உடல் எடை அதிகரிப்பால் பலர் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றன. எனவே இதை தடுக்க சரியான நேரத்தில் உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
Weight loss fruits in tamil
இதற்கு தவறான உடற்பயிற்சி செய்தல், உணவில் சிறப்பு கவனம் செலுத்துதல் ஆகியவை மிகவும் அவசியம். முக்கியமாக நீங்கள் உங்களது உணவில் சேர்க்கும் சில விஷயங்கள் உங்களது எடையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர், இலவங்கப்பட்டை தண்ணீர், போன்ற சிறப்பு பானங்களை குடிப்பது மிகவும் நல்லது. இதையும் தவிர, சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் அதிகரித்து வரும் எடையை கட்டுப்படுத்து விடலாம் தெரியுமா? அவை என்னென்ன பழங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வெறும் '4' விஷயங்கள்.. ஈஸியா '18' கிலோ எடை குறைத்த பெண்ணின் அனுபவ பகிர்வு!!
Weight loss fruits in tamil
வாழைப்பழம்:
வாழைப்பழத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக உதவுகிறது. இது தவிர, வாழைப்பழம் உடல் சோர்வை நீக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க உதவுகிறது. முக்கியமாக வாழைப்பழம் கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகின்றது.
பப்பாளி:
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போதுமான அளவில் இருக்கிறது. இது தவிர அதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், கார்கோஹைட்ரேட் போன்ற பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. முக்கியமாக பப்பாளியை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும் கூடுதலாக இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Weight loss fruits in tamil
பேரிக்காய்:
பேரிக்காயில் நார்ச்சத்து போதுமான அளவில் இருப்பதால், இதை சாப்பிடுவதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். எனவே தினமும் காலை பேரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். இதனால் உடல் எடையையும் சுலபமாக குறைத்து விடலாம்.
கிவி:
கிவியில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் செரிமானம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தாமிரம், சோடியம், வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற
பண்புகள் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடல் எடை நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பழம் சாப்பிடுவது நல்லது.
Weight loss fruits in tamil
திராட்சை:
திராட்சையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படுத்தப்படும். இதனால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். இது தவிர, இந்த பழம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெரி சுவையான மற்றும் ஜூஸியான பழமாகும். இந்த பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளதால், தினமும் காலையில் இந்த பழத்தை சாலட் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!