வெறும் '4' விஷயங்கள்.. ஈஸியா '18' கிலோ எடை குறைத்த பெண்ணின் அனுபவ பகிர்வு!!  

Weight Loss Tips : எளிமையான முறையில் எவ்வாறு உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்பது குறித்த உண்மையான அனுபவத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

story of a woman who loses 18 kg with 4 steps in tamil mks

உடல் எடையை குறைப்பது எளிதான விஷயம் அல்ல. அதற்கு நிறையவே மெனக்கெட வேண்டியுள்ளது.  உணவு பழக்கம், தூக்கம், உடற்பயிற்சி போன்ற பல்வேறு காரணிகள் அதில் அடங்கியுள்ளன. சரியான உணவுப் பழக்கத்தையும், உடல் எடை குறைப்பதற்கான அடிப்படையான விஷயங்களையும் அறிந்து கொண்ட ஒருவருக்கு எடையை குறைப்பது கடினமான காரியம் அல்ல. இதற்கான அனுபவப்பூர்வமான விளக்கங்களை இந்த பதிவில் காணலாம். 

அண்மையில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான மேடி டிசே என்பவரின் அனுபவ பகிர்வில், எடை குறைப்பு தான் ஹாட் டாபிக். கிட்டத்தட்ட 11 மாதங்களில் அவர் 18 கிலோ எடையை குறைத்ததாக பகிர்ந்திருந்தார். தன் எடை குறைப்புக்கு படிப்படியாக அவர் பின்பற்றிய எளிய 4 விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். 

இதையும் படிங்க:  உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க!

முதல் படி (Step 01): 

உடற்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்பில் முக்கியமான அங்கமாகும். மேடி தன் எடையை குறைக்க வாரத்தில் 4 முதல் 6  நாட்கள் வலிமை பயிற்சிகள் (Strength traning), கார்டியோ பயிற்சிகளை செய்தாராம். தன்னுடைய தசைகளை வலுவாக்க, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க எப்போதும் கார்டியோ உடற்பயிற்சிகளுடன், வலிமைக்கான பயிற்சிகளையும் செய்து வந்துள்ளார். இந்த இரண்டு பயிற்சிகளையும் ஒருங்கிணைந்து செய்ததால் அவருடைய கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருடைய உடற்தகுதியும் மேம்பட்டு வந்துள்ளது.  எடையை குறைக்க கார்டியோவும், வலிமை பயிற்சிகளும் பெரிதும் உதவுகின்றன என மேடி பகிர்ந்துள்ளார். 

இரண்டாம் படி (Step 02):

எடை குறைப்புக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அதிகமாக குடிப்பது உதவுகிறது. உங்களுடைய உடலை நீரற்றமாக வைத்திருக்க 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் தினம் குடிக்க வேண்டும். மேடி தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணத்தில் நாள்தோறும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தியுள்ளார். இது செரிமானத்தை ஆதரிப்பதாகவும், உடலுக்கு ஆற்றலை வழங்குவதாகும் கூறிய மேடி, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் என்றார். 

உணவு பழக்கம் (Step 03): 

எடை குறைப்பில் உணவுப் பழக்கம் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை செய்யக்கூடியது. எடையை குறைக்கும்போது  எல்லா சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் தசை இழப்பு (muscle lose) இருக்காது. மேடி 80/20 என்ற விதியை பின்பற்றி சாப்பிட்டுள்ளார். அவருடைய உணவுகளில் 80% எப்போதும் புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துள்ளார். மீதமுள்ள 20% உணவுகள் கொஞ்சம் தளர்வுகளுடன் எடுத்தார். அதில் அவருக்கு பிடித்த உணவுகள் இடம்பெற்றுள்ளன.  

நான்காவது படி (Step 04): 

நீங்கள் எடை குறைப்பு பயணத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது உடலில் ஏற்படும் மாற்றங்களை தான். இந்த மாற்றங்கள் உங்களை மேலும் உத்வேகப்படுத்தும். மேடி ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் தன்னைப் புகைப்படம் எடுத்து அதில் உள்ள முன்னேற்றங்களை கவனித்து வந்துள்ளார். அடிக்கடி உங்கள் எடையை பார்ப்பதை விட இந்த புகைப்பட முறை நம்பகத்தன்மை உடையது. இது கண்களுக்கு மாற்றத்தைக் காட்டுகிறது. 

இதையும் படிங்க:  காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!

எடை குறைக்க மேடியின் அட்வைஸ்! 

எடையை குறைக்க நினைப்பவர்கள் பொறுமையுடனும், படிப்படியான மாற்றங்களை ரசித்தபடியும் தங்கள் எடை குறைப்பு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மேடி. தன்னுடைய உடல் அமைப்பு வடிவம் படிப்படியாக மாறுவதை தொடர்ந்து கவனித்தார். இதுவே மேடியை   எடை குறைப்பு பயணத்தில் முழுமையாக ஈடுபட வைத்தது. 

ஒரு போதும் இந்த பயணத்தில் நீங்களே உங்களிடம் கடுமையாக  நடந்து கொள்ள வேண்டாம் எனவும் மேடி அக்கறையுடன் கூறுகிறார். 

1). நீரேற்றம்
2). தசை வலிமை
3). ஹார்மோன் சமநிலை
4). உடலமைப்பு ஆகியவற்றில் தெரியும் மாற்றங்களை கவனித்து அதற்கேற்ப உணவு, உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். நிலையான முயற்சிகள் தான் எடை குறைக்க உதவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios