MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஈஸியாக ரெடி பண்ணக் கூடிய 5 லஞ்ச்பாக்ஸ் ரெஸிபி...இனி நோ டென்ஷன்

ஈஸியாக ரெடி பண்ணக் கூடிய 5 லஞ்ச்பாக்ஸ் ரெஸிபி...இனி நோ டென்ஷன்

காலை நேர சமையல் பதற்றத்தைக் குறைக்க, கூகுளில் தேடியும் சரியான தீர்வு கிடைக்காமல் சோர்வடைந்த குடும்பத் தலைவிகளா நீங்கள்? கவலையை விடுங்கள்! உங்களுக்காகவே மிக எளிமையாகவும், வேகமாகவும் செய்யக்கூடிய 5 லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் இதோ.

2 Min read
Author : Priya Velan
Published : Jul 11 2026, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஈஸியான 5 லஞ்ச் பாக்ஸ் ரெபிசி :
Image Credit : Getty

ஈஸியான 5 லஞ்ச் பாக்ஸ் ரெபிசி :

காலை வேளையின் அவசர கதியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்லும் கணவர் அல்லது மனைவிக்கும் என்ன சமைப்பது என்பது ஒவ்வொரு இல்லத்தரசியின் தினசரிப் போராட்டமாகும். சமையல் எளிமையாகவும், அதே நேரத்தில் மதியம் சாப்பிடும்போது உணவு கெட்டுப் போகாமலும், சுவையுடனும் இருக்க வேண்டும். வழக்கமான எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து அலுத்துப் போனவர்களுக்கு, சத்துக்கள் நிறைந்த அதே நேரத்தில் பத்தே நிமிடங்களில் செய்யக்கூடிய 5 புதுமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபிகளை, சில பிரத்யேக டிப்ஸ்களுடன் வாங்க தெரிந்து கொள்ளலாம். இது நிச்சயம் காலை நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இனி லேட்டாக எழுந்தாலும் டென்ஷனே இல்லாமல் சட்டென லஞ்ச் தயார் செய்து கொடுத்து விடலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
புதினா-தேங்காய்ப்பால் சாதம் :
Image Credit : Getty

புதினா-தேங்காய்ப்பால் சாதம் :

வழக்கமான புதினா சாதத்திற்குப் பதிலாக, புதினா மற்றும் மல்லித்தழையை அரைக்கும் போது தண்ணீர் ஊற்றாமல், கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை நெய்யில் சீரகம், முந்திரி தாளித்து வதக்கி, உதிர் உதிராக வடித்த சாதத்துடன் கலக்க வேண்டும். தேங்காய்ப்பால் சேர்ப்பதால் மதியம் வரை சாதம் வறண்டு போகாமல், மல்லிகைப்பூ போன்ற மென்மையுடன், அலாதியான நறுமணத்துடன் இருக்கும்.

Related Articles

Related image1
தயிர் துவையல் செய்முறை...இதுவரை இப்படி ஒரு துவையலை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க
Related image2
Cooking tips: தஞ்சாவூர் ஸ்பெஷல் தேங்காய் திரட்டுப்பால்...இவ்வளவு ஈஸியா ஒரு ஸ்வீட்டா?
36
கேரட்-பூண்டு கார சாதம் :
Image Credit : Getty

கேரட்-பூண்டு கார சாதம் :

குழந்தைகள் பூண்டையும் கேரட்டையும் தனியாகக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் சிறிதளவு சாம்பார் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இந்த மசாலாவில் சாதத்தைப் பிரட்ட வேண்டும். பூண்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்; கேரட்டின் இனிப்புத்தன்மையும் பூண்டின் காரமும் இணைந்து மதிய உணவை சுவையாக்கும்.

46
மல்லி-நிலக்கடலை சாதம் :
Image Credit : Getty

மல்லி-நிலக்கடலை சாதம் :

வறுத்த நிலக்கடலை, வரமிளகாய் மற்றும் எள் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் கறிவேப்பிலை, கடுகு தாளித்து, நறுக்கிய மல்லித்தழையை வதக்கி, பின் இந்த நிலக்கடலை பொடியையும் சாதத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இந்த சாதம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. மதியம் சாப்பிடும் போது நிலக்கடலையின் மொறுமொறுப்பு மாறாமல் இருக்க, சாதம் ஆறிய பின் பொடியைச் சேர்க்கவும்.

56
சீரக-பன்னீர் சாதம் :
Image Credit : Getty

சீரக-பன்னீர் சாதம் :

நெய்யில் தாராளமாக சீரகம் மற்றும் பச்சை மிளகாய் தாளித்து, உதிர்த்த பன்னீர் (Scrambled Paneer) அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய பன்னீரைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இதனுடன் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சாதத்தைக் கிளறினால் லஞ்ச் பாக்ஸ் காலி ஆவது உறுதி. பன்னீரை அதிக நேரம் வதக்கக் கூடாது. லேசாக வதக்கினால் மட்டுமே மதியம் சாப்பிடும் போது அது மென்மையாக (Soft) இருக்கும்.

66
குடைமிளகாய்-தயிர் சாதம் :
Image Credit : Getty

குடைமிளகாய்-தயிர் சாதம் :

மதிய வேளையில் தயிர் சாதம் புளித்துவிடாமல் இருக்க, காய்ச்சிய பாலும் சிறிதளவு தயிரும் கலந்து சாதத்தைப் பிசைய வேண்டும். இதன் சிறப்பம்சமாக, நெய்யில் பொடியாக நறுக்கிய வண்ணக் குடைமிளகாய்களை (Capsicum) லேசாக வதக்கி தயிர் சாதத்தில் கொட்ட வேண்டும். குடைமிளகாய் சேர்ப்பதால் தயிர் சாதத்திற்கு ஒரு தனித்துவமான வாசனையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களும் கிடைக்கின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bottle Cleaning: இனி பாட்டில்ல வாடையே வராது! இப்படி க்ளீன் பண்ணா போதும்!
Recommended image2
Chicken Vs Mutton: அசைவ பிரியர்களே அலர்ட்! மழைக்காலத்தில் சிக்கன் VS மட்டன்.. எது பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image3
Dangerous Hill Stations: ரொமான்டிக் மூட்ல இருக்கீங்களா? இந்த 5 இடத்துக்கு மட்டும் ஜோடியா போகாதீங்க, உயிருக்கே ஆபத்து!
Related Stories
Recommended image1
தயிர் துவையல் செய்முறை...இதுவரை இப்படி ஒரு துவையலை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க
Recommended image2
Cooking tips: தஞ்சாவூர் ஸ்பெஷல் தேங்காய் திரட்டுப்பால்...இவ்வளவு ஈஸியா ஒரு ஸ்வீட்டா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved