- Home
- Lifestyle
- Cardamom: தினமும் உணவில் ஏலக்காய் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா? ஏலக்காயில் இருக்கும் 5 பெஸ்ட் மருத்துவ குணங்கள்
Cardamom: தினமும் உணவில் ஏலக்காய் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா? ஏலக்காயில் இருக்கும் 5 பெஸ்ட் மருத்துவ குணங்கள்
Health benefits of cardamom: ஏலக்காயை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Health benefits of cardamom:
தென் இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் ஒரு மசாலாப் பொருளாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு வகைகள் செய்வதற்கும் பால் பொருட்களில் சேர்க்கவும், தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும்.
Health benefits of cardamom:
வாய் புத்துணர்ச்சி, நறுமணம், வாசனை மற்றும் சுவைக்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.அன்றாடம் உணவில் 2-3 முறை ஏலக்காய் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
செரிமானம் மேம்படும்:
ஏலக்காய் விதைகளில் இருக்கும், அதிக அளவிலான நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஏலக்காய் விதைகள் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். பயணத்தின் போது ஏற்படும், லேசான வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சினையை சமாளிக்க ஏலக்காய் உதவுகிறது.
Health benefits of cardamom:
இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு பயன்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவற்றில் இருக்கும், டையூரிடிக் பண்புகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
Health benefits of cardamom:
கல்லீரலை சுத்தம் செய்யும்:
ஏலக்காயில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி கொண்டவை. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்துதல், கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மன அழுத்தம் குறையும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Health benefits of cardamom:
நோய்த்தொற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்:
பருவ மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பூஞ்சை தொற்று, இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சாறுகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனைத் தரும்.
Health benefits of cardamom:
சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்
சளி மற்றும் காய்ச்சலுக்கு ஏலக்காய் நிவாரணம் தரக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பஞ்சாய் பறந்துவிடும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கிவிடும். பசியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை போட்டு சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.