- Home
- Lifestyle
- Cholesterol: உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சூப்பர் 5 உணவுகள்...மறக்காம ட்ரை பண்ணுங்கோ..
Cholesterol: உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சூப்பர் 5 உணவுகள்...மறக்காம ட்ரை பண்ணுங்கோ..
Cholesterol Food: உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

High Cholesterol
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை உள்ள ஏராளமானோர் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். இதற்கு மேற்கத்திய உணவு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில், நீங்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் இங்கு எண்ணெய் உணவுகளை உண்ணும் போக்கு மிக அதிகமாக உள்ளது.
High Cholesterol
இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும். எனவே, நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. எனவே, உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
High Cholesterol
பழங்கள்:
பெர்ரி, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற நம்முடைய உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. எனவே, மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற இனிப்பு பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, உண்ணும் உணவில் அதிக கவனம் அவசியம்.
High Cholesterol
உலர் பழங்கள்:
உங்கள் எடை அதிகரிக்கும் போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடல் எடையை கட்டுப்படுத்தும் உலர் பழங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் வீட்டில் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை காட்டிலும், இந்த உலர் பழங்கள் எடுத்து கொள்வது. ஆரோக்கியமான உணவாக கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. எனவே, நீங்கள் முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் ஆகியவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
High Cholesterol
தயிர்
தயிரில் இருக்கும் பொட்டாசியம், ஜிங்க், மெக்னீசியம், புரதம் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய சத்துக்கள் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியாமாக வைத்து கொள்கிறது.
High Cholesterol
பாப்கார்ன்
மாலை நேர ஸ்நாக்ஸில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல, அதற்கு பதிலாக நீங்கள் பாப்கார்னை சாப்பிடலாம், ஆனால் அது உங்கள் வீட்டில் மற்றும் ஆலிவ் எண்ணெயில் சமைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி படுத்து கொள்ளுங்கள்.
High Cholesterol
உறுப்பு இறைச்சி
அசைவ உணவுகளை விரும்புபவர்கள் பொதுவாக இந்த உறுப்பு இறைச்சி உட்கொள்வதில்லை. ஆனால் உறுப்பு இறைச்சிகள் மிகவும் சத்தானவை. அவற்றில் ஏராளமான நன்மைகள் இருப்பதால், உங்கள் தினசரி உணவில் உறுப்பு இறைச்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பை அதிகரிக்காது.