ஐபிஎல் 2020: ஐயா கோலி, இது உங்களுக்கே நியாயமா தெரியுதா..? பிறகு அம்பயர் எதுக்கு..?

First Published 15, Oct 2020, 1:23 PM

டி20 கிரிக்கெட்டில் எந்த விதியை மாற்ற வேண்டும் என்ற தனது கருத்தை ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் இதுவரை சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேஎல் ராகுலின் தலைமையில் இந்த சீசனில் களம் கண்டுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி, ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரே அணி ஆர்சிபிதான். அந்தவகையில், இன்று ஷார்ஜாவில் மீண்டும் ஆர்சிபியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. இந்நிலையில், இரு அணிகளின் கேப்டன்களான கோலியும் ராகுலும் நடத்திய உரையாடலில், டி20 கிரிக்கெட்டில் எந்த விதியை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று ராகுல், கோலியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கோலி, ஒரு கேப்டனாக ஒய்டு மற்றும் இடுப்புக்கு மேல் வீசப்படும் ஃபுல் டாஸுக்கான நோ பால் ஆகிய 2 குறித்த ரிவியூ எடுக்கும் உரிமை கேப்டனுக்கு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில், ஒரு ஒய்டு குறித்த தவறான முடிவும், போட்டியின் முடிவையே மாற்றிவிடுகிறது என்று தெரிவித்தார் கோலி.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் கூட, ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில் ஒய்டு கொடுக்க முயன்ற அம்பயர் பால் ரீஃபிள், சிஎஸ்கே கேப்டன் தோனியின் எதிர்ப்பால், தனது முடிவை திரும்பப்பெற்று ஒய்டு கொடுக்கவில்லை. அந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், கோலி ஒய்டு குறித்த ரிவியூ எடுக்கும் உரிமை கேப்டனுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொழில்நுட்ப வளர்ச்சியால், கள நடுவர்களின் பணி வெகுவாக குறைந்துவிட்டது. நோ பாலைக்கூட நேரடியாக டிவி அம்பயரே முடிவு செய்கிறார். கள நடுவர் அவுட் கொடுக்கும் முடிவை எதிர்த்து ரிவியூ எடுக்கும் உரிமை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒய்டுக்கான ரிவியூவையும் கேப்டன் எடுக்கும் உரிமையை கேட்டால், கள நடுவரின் அதிகாரமும் பொறுப்பும் மேலும் சரிவை சந்திக்கும். அதற்கு கள நடுவர்களே இல்லாமல், அனைத்தையும் தேர்டு அம்பயரிடமே கேட்டுவிடலாமே..!

loader